விசிகவுக்கு பானை சின்னம் கிடைப்பது உறுதி: திருமாவளவன் நம்பிக்கை

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சித் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதுதவிர, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் விசிக போட்டியிடுகிறது. எனவே, இந்த தேர்தலில் தங்களுக்கு பானை சின்னத்தை, பொதுவான சின்னமாக ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் விசிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக வாக்கு பெற்றதாகக் கூறி, விசிகவின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் … Read more

தெலுங்கு தேசம் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஆந்திராவில் தெலுங்கு தேசம்-பாஜக-ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றன. ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 3 கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. அதன்படி, இதுவரை அறிவிக்காத 4 மக்களவை மற்றும் 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தெலுங்கு தேசம் அறிவித்துள்ளது. விஜயநகரம் மக்களவை தொகுதிக்கு கே. அப்பலநாயுடு, ஓங்கோல் தொகுதிக்கு ஸ்ரீநிவாசுலு ரெட்டி, அனந்தபுரம் தொகுதிக்கு அம்பிகா லட்சுமி நாராயணாவும், கடப்பாவுக்கு … Read more

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஏப்.1-ம் தேதி முதல் நவீன ஸ்மார்ட் போர்டு: தொடக்க கல்வி இயக்குநரகம் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் கற்பித்தலுக்கான அதிநவீன ஸ்மார்ட் போர்டுகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி (தொடக்க கல்வி)அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு மடிக்கணினி வழங்கி, அதற்கான அறிக்கையை இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து, அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் போர்டுகள் விநியோகம் செய்யப்பட … Read more

விஜய் தேவரகொண்டாவின் 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தின் ட்ரைலர் வெளியானது

Family Star Trailer OUT: விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் Family star படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

2மாதத்தில் 35000 விண்ணப்பம்: வீடுகளுக்கு சூரியசக்தி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு…

சென்னை: மத்திய பாஜக அரசு சமீபத்தில் தொடங்கிய மேற்கூரை சோலார் திட்டத்துக்கு (சூரியசக்தி மூலம் வீடுகளுக்கு மின்சாரம் ) தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  இந்த திட்டத்தை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தொடங்கிய இரு மாதங்களில் சுமார் 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் (பிப்ரவரி 2024),  ‘பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜ்லி யோஜனா’ (https://pmsuryaghar.gov.in/) என்ற மேற்கூரை சோலார் திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். இதற்கு … Read more

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம்

தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 55. சென்னை, புரசைவாக்கத்தில் வசித்து வந்த அவருக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டது, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்தார். சென்னை, அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்கம் படித்தவர். 25 வருடங்களுக்கு முன்பு தனியார் டிவியில் ஒளிபரப்பான 'சித்தி' என்ற டிவி தொடரில் 'டேனியல்' என்ற கதாபாத்திரத்தில் … Read more

டேனியல் பாலாஜி கேட்காமலே உதவி செய்த கேஜிஎஃப் ஹீரோ.. அப்படி என்ன உதவி செஞ்சாரு தெரியுமா?

சென்னை: பிரபல நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழில் அறிமுகமான டேனியல் பாலாஜி தனது அசாத்தியமான நடிப்புத் திறமையால் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். கேஜிஎஃப் ஹீரோ யஷ் உடன் இணைந்து டேனியல் பாலாஜி நடித்த நிலையில், அவருக்கு தக்க

23 பாகிஸ்தானியர்களுடன் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பலை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை; சரணடைந்த கொள்ளையர்கள்

டெல்லி, இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், சரக்கு கப்பல்களை கடத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி கடற்கொள்ளையர்களும் கப்பல்களை கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரபிக்கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் ஈரானை சேர்ந்தவர்கள் மீன்பிடி கப்பலில் பயணித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஏடன் வளைகுடா பகுதியில் சகொட்ரா … Read more

Tamil News Live Today: வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்; இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகும்!

வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்! தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதியுடன் முடிந்தது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். பின்னர் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 1085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன.  புதுச்சேரியில் 34 வேட்பாளர்கள் 45 மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் 27 வேட்பாளர்கள் சமர்ப்பித்த 36 … Read more

கோவையில் பிரதமர் பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்து சென்றதாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

சென்னை: கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றதாகப் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் பள்ளி தலைமை ஆசிரியை தொடர்ந்த வழக்கில், போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் கடந்த 18-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கோவையி்ல் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களை பள்ளி சீருடையில் அழைத்துச் சென்றதாக மாவட்ட குழந்தைகள் … Read more