கேஜ்ரிவால் போனில் இருந்து ஆம் ஆத்மி தேர்தல் உத்தியை அமலாக்க துறை அறிய முயற்சி: டெல்லி அமைச்சர் ஆதிஷி குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த்கேஜ்ரிவால் 6 நாள் அமலாக்கத் துறை காவலுக்கு பிறகு வியாழக்கிழமை டெல்லி ரோஸ் அவென்யூநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 1-ம் தேதி வரை மேலும் 4 நாட்களுக்கு அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் டெல்லி கல்விஅமைச்சர் ஆதிஷி நேற்று கூறியதாவது: டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடந்த விசாரணையில் கேஜ்ரிவால்தனது மொபைல் பாஸ்வேர்டை தர மறுப்பதால் அவரை மேலும் சில … Read more

ஆர்சிபியை சொல்லி தோற்கடித்த கவுதம் கம்பீர்! அந்த அணி மீது ஏன் அவ்ளோ வெறுப்பு?

ஐபிஎல் 2024 தொடரின் 10வது லீக் போட்டியில் கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டும் நிலைத்து நின்று விளையாடி 83 ரன்கள் எடுக்க, அவருக்கு பக்கபலமாக கிரீன் 33 ரன்களும், மேக்ஸ்வெல் 28 ரன்களும் எடுத்தனர். இறுதிகட்டத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 3 சிக்சர்கள் விளாசி 8 … Read more

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் நேற்றிரவு சென்னையில் காலமானார். வேட்டையாடு விளையாடு படத்தில் கமலஹாசனுக்கு டப் கொடுத்ததன் மூலம் பிரபலமானவர் டேனியல் பாலாஜி. ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்த சித்தி தொலைக்காட்சித் தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக அறிமுகமான பாலாஜி தமிழ் திரையுலகில் டேனியல் பாலாஜி என்ற பெயருடன் நடிக்கத் துவங்கினார். நடிகர் ஸ்ரீகாந்தின் ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமான டேனியல் பாலாஜி தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், காக்க … Read more

மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு!

இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ஹாரர் த்ரில்லர் ஜானரில் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டு வந்தது. பின்னர் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ரத்ன குமாருக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் மீண்டும் இத்திரைப்படத்தை பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தொடங்கியுள்ளனர். இப்போது இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Actor Vijay: ஏப்ரலில் வெளியாகும் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அர்ச்சனா கல்பாத்தி உறுதி!

சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்டவர்கள் நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் அடுத்தடுத்து சென்னை, ஹைதராபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் மாஸ்கோ செல்ல திட்டமிட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து இரு

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் – என்.ஐ.ஏ. அறிவிப்பு

பெங்களூரு, பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில், பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா ஆகிய 2 பேருக்கும் … Read more

நியூசிலாந்து முன்னாள் வீரருக்கு அமெரிக்க அணியில் இடம்

நியூயார்க், கனடா கிரிக்கெட் அணி அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. அமெரிக்கா- கனடா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 7-ந்தேதி ஹூஸ்டனில் நடக்கிறது. இந்த தொடருக்கான அமெரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மோனக் பட்டேல் தலைமையிலான அந்த அணியில் நியூசிலாந்தை முன்னாள் வீரரான கோரி ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார். ஆண்டர்சன் சர்வதேச ஒருநாள் போட்டியில் 2014-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 36 பந்துகளில் … Read more

காசிமேடு மீன் சந்தைக்கு வரும் வியாபாரிகளிடம் பணம் பறிமுதல் செய்யக் கூடாது: ஆட்சியரிடம் மீனவர் சங்கம் புகார் மனு

சென்னை: காசிமேடு மீன் சந்தைக்கு வியாபாரம் செய்ய வரும் மீன் வியாபாரிகள் கொண்டு வரும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யக் கூடாது என மீனவர் சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில், அதன் தேசிய அமைப்பு செயலாளர் நாஞ்சில் ஜி.ஆர்.சேவியர் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: காசிமேடு மொத்த மீன் சந்தைக்கு வெளியூர்மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து மீன் … Read more

அமெரிக்க, இங்கிலாந்து போர்க்கப்பல்களின் பராமரிப்பு மையமாக மாறுகிறது சென்னை

புதுடெல்லி: சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் துறைமுகத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போர்க்கப்பல்கள் பழுது பார்க்கப்படவுள்ளன. சீனா தனது கடற்படை கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தென் சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தனது கடற்படையையும் தொடர்ந்து வலுவாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தோ – பசிபிக் கடல் பகுதிகளில் பயணிக்கும் போர்க்கப்பல்களை … Read more

தற்கொலைப்படை தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் அணை கட்டும் பணிகளை நிறுத்தியது சீனா

பெஷாவர்: பாகிஸ்தானில் 2 அணைகளின் கட்டுமானப் பணிகளில் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதில், 1,250 சீனர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் மீது தீவிரவாதிகள் தற்கொலைபடை தாக்குதலை நிகழ்த்தினர். இதில், 5 சீனப் பொறியாளர்கள் மற்றும் பாகிஸ்தானியர் ஒருவர் உயிரிழந்தனர். எனவே அணைகட்டும் பணிகளை சீன நிறுவனம் நிறுத்திவிட்டது. இதுகுறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரி கூறுகையில்,“தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சீன ஒப்பந்த கட்டுமான நிறுவனம் 2 அணைகளின் கட்டமைப்பு … Read more