ராகவா லாரன்ஸ் போட்ட விதை.. டிகிரி முடித்த இளைஞர்.. மாஸ்டருக்கு குவியும் பாராட்டு

சென்னை: தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாரன்ஸ். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் லாரன்ஸின் நடிப்பும் அட்டகாசமாகவே இருந்தது. இதற்கிடையே லாரன்ஸ் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில்

Air India: 24 மணிநேரம் தாமதமான விமானம்; வழக்கு தொடுத்த பயணி.. ரூ.85,000 இழப்பீடு வழங்க உத்தரவு!

ஏர் இந்தியா (Air India) விமான நிறுவனத்தின் AI-331 விமானம், கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி, மாலை 5 மணிக்கு பாங்காக்கில் உள்ள ஸ்வர்ணபூமி விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி புறப்படவிருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய 280-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், இந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படாமல், மறுநாள் மாலை 8 மணிக்குப் புறப்பட்டு இரவு 11 மணிக்குத்தான் டெல்லியில் தரையிறங்கியது. விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமான ஓட்டுநர்களுக்கு … Read more

“பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்க மாட்டோம்” – அமைச்சர் உதயநிதி @ புதுச்சேரி

புதுச்சேரி: “பிரதமர் மோடி திமுகவினருக்கும், முதல்வருக்கும் தூக்கம் போய்விட்டது என்று சொல்கிறார். பாஜகவை ஜூன் 4-ம் தேதி வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் தூங்க மாட்டோம்” என்று புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். புதுச்சேரி மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் வில்லியனூர், மரப்பாலம், அண்ணா சிலை ஆகிய இடங்களில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வில்லியனூர், மரப்பாலம் … Read more

ஜனநாயகமா, சர்வாதிகாரமா? – எது தேவை என்பதை முடிவு செய்யும் தருணம் இது: கார்கே பேச்சு

புதுடெல்லி: “ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாரதிய ஜனதா கட்சியும் விஷம் போன்றவை. விஷத்தை சுவைத்தால் மரணம் ஏற்படும். அதனால், ஜனநாயகம் வேண்டுமா அல்லது சர்வாதிகாரம் வேண்டுமா என்பதை நாம் முடிவு செய்யும் தருணம் இது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் கேஜ்ரிவால் கைதைக் கண்டித்து நடந்த கண்டனப் பேரணி பொதுக் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாரதிய ஜனதா கட்சியும் விஷம் போன்றவை. விஷத்தை சுவைத்தால் மரணம் ஏற்படும். அதனால், ஜனநாயகம் … Read more

எங்கள பார்த்தா கட்சி இருக்காதுனு சொல்ற? பாஜகவை தாக்கிய இபிஎஸ் – கொண்டாடிய தொண்டர்கள்

Edappadi Palanisamy Attacks BJP: பாஜகவை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியதே ஜெயலலிதா தான் என அதிமுகவை விமர்சித்த பாஜகவின் ராம ஸ்ரீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.

பாஜகவுக்கு தோல்வி பயம் : தமிழக முதல்வர் விமர்சனம்

டில்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாஜகவுக்குத் தோல்வி பயம் வந்துள்ள்தாக விமர்சித்துள்ளார். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரையை திருச்சி சிவா எம்.பி. வாசித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எனது கடுமையான கண்டனத்தையும் தி.மு.க.வின் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் தனது ஏவல் படைகளான சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத் துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பா.ஜ.க. அரசு மிரட்டுகிறது.  டில்லி முதல்வர் அரவிந்த் … Read more

4 நாளில் 50 கோடி வசூலை கடந்த ‛ஆடுஜீவிதம்'

மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் 'தி கோட் லைப்' ( ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கினார். கடந்த மார்ச் 28ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் 1,724 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாளில் 16 கோடியே 70 லட்சம் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் … Read more

விஜய் பட வில்லன்தான் சிவகார்த்திகேயனுக்கும் வில்லன்.. ஏ.ஆர்.முருகதாஸின் வேற மாதிரி ஸ்கெட்ச்

சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்கிவருகிறார்.அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் வெளியான சூழலில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. தற்போது படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அதுதொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. இந்தச் சூழலில் இப்படத்தில் வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அஜித் நடிப்பில்

வாக்கிங் பிரசாரத்தில் ஸ்டாலின் | கிரிக்கெட் விளையாடி ஓட்டு கேட்ட எல்.முருகன் – Election Clicks

அமமுக தேனி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தேனி போடி பகுதியில் வாக்கு சேகரிக்கும் மனைவி ரேணுகா தினகரன் பிரசார வாகனத்தில் இருந்த அதிமுக கொடியை அகற்றம் கீழ் குந்தா பகுதியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார் எல்.முருகன். Source link

‘பெண்களுக்கு சம உரிமை’ முழக்கமிடும் நிலையில் தமிழக களத்தில் 8% பெண் வேட்பாளர்களே போட்டி

திருவண்ணாமலை: பெண்களுக்கு சம உரிமை என்ற முழக்கம், மேடையில் எதிரொலிக்கும் நிலையில், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 8 சதவீத பெண்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் களத்தில் மகளிர் பங்களிப்பு என்பது மிக மிக குறைவாக இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும், அவர்களது கணவர்களின் ஆதிக்கம் தொடர்கிறது. தேர்தல் … Read more