'ஒடேலா 2' வில் நடிக்கும் தமன்னா

அரண்மனை நான்காம் பாகம் மற்றும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வரும் தமன்னா தற்போது'ஒடேலா 2' தொடரில் நடிக்கிறார். 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெற்றிக்குப் பிறகு நடிக்கும் தொடர் இது. அந்த சீரிஸில் கதைக்காக தனது காதலர் விஜய் வர்மாவுடன் இவர் காட்டிய தாராள நெருக்கம் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானது. இதனால், பல வெப் சீரிஸ்கள் வாய்ப்பு தமன்னாவுக்கு வருகிறது. கடந்த 2022-ல் ஓடிடியில் வெளியான க்ரைம் த்ரில்லர் தொடர் 'ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்'. அசோக் தேஜா … Read more

சாம் கவிஞரை பார்த்து சந்தோஷமான பாண்டியராஜன்.. ஒரு வழியா அப்பாவை ஹேப்பியாக்கிய ப்ரித்வி!

சென்னை: பா. ரஞ்சித் தயாரிப்பில் அவரது நண்பர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, ப்ரித்வி ராஜன், கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் ஜனவரி இறுதியில் வெளியானது. இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான அந்த படத்தை வீட்டில் பெரிய டிவியில் நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜன் பார்த்து

கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பா.ஜ.க. எம்.பி. அரசியலில் இருந்து விலகல்

புதுடெல்லி, 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னாள் மந்திரியும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யுமான ஜெயந்த் சின்ஹா, வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தனது விருப்பத்தை இன்று தெரிவித்துள்ளார். இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் துணைத் தலைவரான யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஆவார். … Read more

ஊக்கமருந்து விவகாரம்: உலகக்கோப்பை வென்ற கால்பந்து வீரருக்கு 4 ஆண்டுகள் தடை

பாரிஸ், ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸ் மற்றும் யுவென்டஸ் கிளப் அணி வீரர் பால் போக்பா கால்பந்து போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர் ஆவார். கடந்த செப்டம்பரில் இத்தாலியின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு தீர்ப்பாயத்தால் போக்பா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அப்போது அவர் உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது உறுதி செயப்பட்டு இருந்தது. அவர் தடைசெய்யப்பட்ட பொருளை … Read more

அமெரிக்காவில் இந்திய நடன கலைஞர் சுட்டு கொலை; தூதரகம் விசாரணை

மிஸ்ஸவுரி, அமெரிக்காவின் மிஸ்ஸவுரி மாகாணத்தில், செயின்ட் லூயிஸ் பகுதியில் அமர்நாத் கோஷ் என்ற நடன கலைஞர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் கொல்கத்தா நகரை சேர்ந்தவரான கோஷ், குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியம் ஆகிய கலைகளில் தேர்ந்தவர். அமெரிக்காவில் பிஎச்.டி. படிப்பை படித்து வந்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை மாலையில் அமர்நாத் கோஷ், செயின்ட் லூயிஸ் அகாடமியருகே மாலைநேர நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரை பலமுறை தாக்க … Read more

அபுதாபி இந்து கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி.. ஆனால் சில விதிமுறைகள் உண்டு

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் கட்டப்பட்ட அரபு நாட்டின் முதல் இந்து கோவில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி, தனது அபுதாபி பயணத்தின் போது, பிப்ரவரி 14 அன்று திறந்து வைத்தார். 

Manjummel Boys: "பிக்னிக் வந்த இடத்துல படத்தை முடிச்சிட்டாங்க!" – தமிழ் வசனங்கள் எழுதிய கிளைட்டன்

சமீபத்தில் வெளியான மலையாளப் படமான `மஞ்சும்மல் பாய்ஸ்’ கேரளா மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. சென்னை உட்பட பெருநகரங்களில் பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை மலையாளப் படங்கள் பெரிதும் வெளியாகாத தென் தமிழகத்தின் பல இடங்களிலும் இந்தப் படம் திரையிடப்பட்டு வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள தமிழ் வசனங்களை எழுதியிருப்பவர் சி.கிளைட்டன் சின்னப்பா. விஷ்ணு விஷாலின் ‘குள்ளநரி கூட்டம்’ உட்பட சில படங்களின் ரைட்டர் இவர்தான். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் போலீஸ் ரைட்டராகவும் நடித்திருக்கும் … Read more

“விசிகவுக்கு 2 சீட்களுக்கு மேலாக தர மறுத்தால் திரும்பத் திரும்ப கேட்போம்” – திருமாவளவன்

சென்னை: “நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். தொடர்ந்து திமுக கூட்டணியில்தான் பயணிப்போம். இந்தத் தேர்தலை திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் இணைந்து தான் எதிர்கொள்வோம். எங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்கிற உரிமை, தேவை உள்ளது. இரண்டு தொகுதிகளுக்கு மேலாக கொடுக்க மறுத்தால் நாங்கள் திரும்பத் திரும்ப கேட்போம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக உடன் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தை … Read more

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியா? – யுவராஜ் சிங் மறுப்பு

குர்தாஸ்பூர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், 2024 மக்களவைத் தேர்தலில் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக விளக்கம் அளித்து மறுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், தனது தாய் ஷப்னம் சிங்குடன் சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். இந்தச் சந்திப்புக்கு பின் யுவராஜ் சிங் 2024 மக்களவைத் தேர்தலில் பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட போகிறார் என்று செய்திகள் வெளியாகின. பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் … Read more

அமெரிக்காவில் இந்திய நடனக் கலைஞர் சுட்டுக் கொலை – அதிர்ச்சிப் பின்புலம்

வாஷிங்டன்: இந்தியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ், அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்கள் சந்தித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த அமர்நாத் கோஷ் என்ற நடனக் கலைஞர், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அமர்நாத் கோஷ். இவர் ஒரு சிறந்த பரதநாட்டியம் மற்றும் … Read more