"எங்களுக்காக இத்தனை பேரு இருக்கீங்க!" – விகடன் வாசகர்களின் உதவியால் நெகிழும் மாற்றுத்திறனாளி பெண்

“எனக்காக யாருமே இல்லைன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, இத்தனை பேரு இருக்கீங்க” என நெகிழ்ந்தபடி பேசுகிறார் சேலத்தைச் சேர்ந்த நாகசக்தி.   பார்வையற்ற தம்பி, இரண்டு பெண் குழந்தைகள், கைவிட்ட கணவர் – மாற்றுத்திறனாளி பெண்ணின் எதிர்நீச்சல்! ‘பார்வையற்ற தம்பி, இரண்டு பெண் குழந்தைகள், கைவிட்ட கணவர் – மாற்றுத்திறனாளி பெண்ணின் எதிர்நீச்சல்!’ என்கிற தலைப்பில் சேலத்தைச் சேர்ந்த நாகசக்தியின் போராட்ட வாழ்க்கை குறித்து விகடன்.காமில் வெளியிடப்பட்ட கட்டுரை பலரது இதயத்தையும் கலங்கடித்தது. இதனைத் தொடர்ந்து, விகடன் வாசகர்கள் … Read more

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை (03.02.2024) போலியோ சொட்டு மருந்துகள் அளிக்கும் நிகழ்வுகள் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதை போன்று நடத்தப்படவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் சென்னை தெற்கில், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மதுரவாயில் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2 நாட்களாக … Read more

அம்பானி மகன் திருமண விழா: 10 நாட்களுக்கு தரம் உயர்த்தப்பட்ட ஜாம்நகர் விமான நிலையம்

ஜாம்நகர்: அம்பானி வீட்டு விசேஷத்திற்காக குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையம் 10 நாட்களுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் … Read more

மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: NPS விதிகளில் மாற்றம், சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக கிடைக்கும்: முதல்வர் அறிவிப்பு

Old Pension Scheme: மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவையின் இரு அவைகளிலும் அறிக்கை வெளியிட்ட ஷிண்டே, ஊழியர்கள் இந்த திருத்தப்பட்ட ஓய்வூதிய முறையை தேர்வு செய்தால் அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% -ஐ ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படியாக பெறுவார்கள் என்று கூறினார். 

Sandhya Raagam: குடும்ப கவுரவம் தான் முக்கியம் காதல் இல்ல! அதிர்ச்சி கொடுக்கும் மாயா!

sandhya raagam tv serial: உடைந்தது ரகசியம்.. மாயாவுக்கு தெரிய வரும் சீனுவின் காதல், அடுத்து நடந்தது என்ன? சந்தியா ராகம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட் 

தமிழ்நாட்டில் பாஜகவா ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள் – திமுக அமைச்சர்!

தமிழ்நாட்டில் திமுக இருக்குமா? பாஜக இருக்குமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் அது மக்களுக்கு தெரியும் என கூறியுள்ளார் திமுக அமைச்சர் ராமச்சந்திரன்.  

எந்த தொகுதியிலும் போட்டியிட த.வா.க. தயார் ! தவாக தலைவர் வேல்முருகன்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், எந்த தொகுதியிலும் போட்டியிட தயார் என தவாக தலைவர் வேல்முருகன் கூறினார். நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணயில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து உள்ளது. ஏற்கனவே கம்யூனிஸ்டு உள்பட சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு முடிந்த நிலையில், இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி உள்பட சில கூட்டணி கட்சிகளிடம் திமுக தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தியது.  பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த … Read more

இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்த ஸ்பெயின் நாட்டு பெண் கூட்டு பலாத்காரம்.. ஜார்க்கண்டில் அதிர்ச்சி!

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை பத்து பேர்கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் இயற்கை அழகை பைக்கில் சுற்றிப்பார்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதி Source Link

Chennai man arrested for smuggling Rs 180 crore worth of drugs to Madurai by train | ரயிலில் ரூ.180 கோடி போதைப்பொருள் மதுரைக்கு கடத்தி வந்த சென்னை நபர் கைது

மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில், கோடிக்கணக்கான மதிப்பு போதைப்பொருளை கொண்டு வந்த சென்னையைச் சேர்ந்தவரை, மத்திய போதைப்பொருள் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு, சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிள்ளமன் பிரகாஷ், 42, என்பவர் இரண்டு பைகளுடன் புறப்பட்டார். மதுரை ரயில்வே ஸ்டேஷனில் அதிகாரிகள் சோதனை செய்ததில், 10 பொட்டலங்களாக 15 கிலோ பவுடரும், 15 கிலோ திரவ வடிவிலான மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளும் அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் … Read more

தமிழ் படத்தில் அறிமுகமாகும் மானசா சவுத்ரி

சென்னையில் பிறந்து வளர்ந்த தெலுங்கு பொண்ணு சிருகுரி மானசா சவுத்ரி. ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. முடித்துள்ளார். மானசாவின் கனவு எப்போதும் மாடலிங் மற்றும் நடிப்பை நோக்கியே இருந்தது. மாடலிங் உலகிற்குள் அவர் 16 வயதிலேயே நுழைந்தார். நீச்சல், ஸ்கேட்டிங், துப்பாக்கி சூடு மற்றும் நடனம் எனப் பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார். ரவிகாந்த் பெரும்பு இயக்கிய 'பப்பில்கம்' என்று தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்து … Read more