மஞ்சும்மேல் பாய்ஸ் பட இயக்குனரை சந்தித்த தனுஷ்

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' . இதுவரை உலகளவில் சுமார் ரூ. 70 கோடி வசூலைக் கடந்துள்ளது. பெரிதளவில் பிரபலமாகாத நடிகர், நடிகைகளை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் சிதம்பரம். இந்த படத்தில் குணா குகை முக்கிய பங்காற்றுகிறது. தமிழ் சினிமா ரசிகர்களிடமும் இந்த படம் வரவேற்பை பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன் இப்படக்குழுவினர்களை சந்தித்து பாராட்டினார். தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் இந்த பட இயக்குனர் … Read more

மின்சார கண்ணா கேள்விப்பட்டிருக்கோம்.. அது என்ன மின்சார கணவர்?.. இந்த வெப்சிரீஸ்ல இப்படியொரு விஷயமா?

பெர்லின்: ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் பாலியல் கலாச்சாரம் எந்தளவுக்கு வேரூன்றி கிடக்கிறது என்பதை கொரியாவின் பிரபல காமெடி நடிகர்களான இருவரும் தோலுரித்துக் காட்டி வருகின்றனர். ரிஸ்க் பிசினஸ் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி என அவர்கள் வெளியிட்டுள்ள வெப்ஷோ நெட்பிளிக்ஸ் செம டிரெண்டாகி வருகிறது. உலகளவில் இந்த ரியல் லைஃப் இடங்களில் நடக்கும் பலான விஷயங்களை ஏகப்பட்ட ரசிகர்கள்

பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்த சிறுவனுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து.

பாக்குநீரினையை நீந்திக் கடந்து, திருகோணமலையை சேர்ந்த 13 வயது சிறுவனான தன்வந்த் சாதனை படைத்துள்ளார். அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து ஆரம்பித்த சாதனைப்பயணம் தலைமன்னாரை வந்து அடைந்தது. சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை எட்டு மணி, 15 நிமிடத்தில் குறித்த சாதனையினை தன்வந்த் படைத்துள்ளார். இச்சாதனையை படைத்து கிழக்கு மாகாணத்திற்கு இச்சிறுவன் பெருமை சேர்த்துள்ளார். இச்சிறுவன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் … Read more

கூகுள் அடாவடி… ப்ளே ஸ்டோரில் இருந்து நாக்ரி, பாரத் மேட்ரிமோனி செயலிகளை நீக்கியது ஏன்?

Google: தேடுபொறி (Search engine) தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய நிறுவனமாக இருக்கும் கூகுள், இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய எதிரியாக மாறியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நம் நாட்டின் மிக முக்கியமான நிறுவனங்களான பாரத்மேட்ரிமோனி, நாக்ரி, சாதி, குக்கு எப்.எம். உள்ளிட்ட பல செயலிகளை நீக்கியிருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம், கூகுள் இப்படி செய்தது சரியா என்பதைத் தெரிந்துகொள்ள முற்பட்டோம். விஷயம் இதுதான்… … Read more

மத்திய பாஜக அரசின் மூலமாக தமிழகத்தில் 11 லட்சம் கோடியில் நலத்திட்டங்கள்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்

சென்னை: தமிழகத்துக்கு ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை மத்திய பாஜக அரசு வழங்கியுள்ளது என்று மத்திய தகவல் மற்றும்ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். தென்மண்டல அளவிலான அகில இந்திய வானொலி நிலையங்களின் செயல்பாடுகள் தொடர்பானமாநாடு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியதாவது: தென்னிந்திய அளவில் முதன்முதலாக சென்னையில் இன்று நடைபெற்ற அகில இந்திய வானொலி (ஆகாஷ் … Read more

ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் பிரியங்கா: அமேதியில் மீண்டும் ராகுல்?

புதுடெல்லி: உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மீட்கும் முக்கிய முகமாக பிரியங்கா வதேரா கருதப்பட்டார். 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரியங்காவின் செல்வாக்கு உ.பி.யில் குறையத் தொடங்கியது. இந்த சூழலில் அவர் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன் நேரடி அரசியல் களத்தில் இறங்கினார். கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவரிடம் உ.பி. மக்களவைத் தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டது. எனினும் அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது. சோனியா … Read more

Aditi Shankar: அதர்வாவுடன் நடிக்கும் அதிதி ஷங்கர்! இயக்குனர் யார் தெரியுமா?

ஸ்ரீவாரி பிலிம் பி.ரங்கநாதன் வழங்கும் இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில், அதர்வா முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் அவுட் அண்ட் அவுட் என்டர்டெய்னர் திரைப்படம் ‘புரொடக்‌ஷன் நம்பர் 5’.  

தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு! அரசியல் கட்சிகளுக்கே ஆப்பு வைக்கும் பொதுமக்கள்!

Election Awareness Of People : வினோதமான முறையில் கோரிக்கை அடங்கிய பேனரை வைத்த ஊர் பொதுமக்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தலுக்கு முன்னதாக அதிர்ச்சியை அளித்துள்ளனர்! 

போர் விமர்சனம்: `இந்த காலேஜ் எங்க இருக்கு?' இருவரின் ஈகோ யுத்தமும், யதார்த்தமற்ற கல்லூரிக் களமும்!

புதுச்சேரி (நம்பவேண்டும்) செயின்ட் மார்ட்டின் பல்கலைக்கழகத்தில் தனது பி.ஹெச்.டி-யை முடித்து பட்டம் வாங்க முயன்று கொண்டிருக்கிறார் பிரபு செல்வன் (அர்ஜுன் தாஸ்). அவருக்குப் பக்கபலமான தோழியாக ரிஷ்விகா (சஞ்சனா நடராஜன்). அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவராக நுழைகிறார் யுவராஜ் (காளிதாஸ் ஜெயராம்). பிரபு செல்வனுக்கும் இவருக்கும் இறந்த கால பகை. அந்த மோதல் நிகழ்காலத்திலும் போராக வெடிக்கிறது. மறுபுறம் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவருக்கான தேர்தல் தொடர்பாக காயத்ரிக்கும் (டி.ஜெ.பானு) அரசியல்வாதி மற்றும் கல்லூரி … Read more

அண்ணாமலை மக்களவை தேர்தலில் போட்டியா?

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தாம் மக்களவைத் தேர்தலில் போட்டியா என்ற கேள்விக்கு இன்று விடை அளித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தனது நடைப்பயணத்தை முடித்து வைத்து அதையொட்டி நடந்த பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். வர உள்ள மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று பலரும் கூறி வருகின்றனர்.  இன்று அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர்,  “நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்ற தகவலை யார் சொன்னார்கள் … Read more