Month: March 2024
ஜெயம் ரவி படத்தில் பாடிய ஸ்ருதிஹாசன்
வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. தற்போது ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் யோகி பாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்திற்காக நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இந்த பாடலை சினேகன் எழுதியுள்ளார். இது குறித்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. … Read more
இளையராஜா குடும்பத்துக்குள் இப்படி ஒரு பிரச்னையா?.. டாப் சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்
சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைத்தவர். அவர் வந்த பிறகுதான் கன்னியாகுமரி மீனவரிலிருந்து வரப்பில் இருக்கும் விவசாயிவரை அனைவரும் இசைக்காக வாய் திறந்தனர். எத்தனையோ இசையமைப்பாளர்கள் இனி வந்தாலும் அவர் போட்ட பாதையில்தான் பயணிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அவரது இசையில் அடுத்ததாக விடுதலை 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. அன்னக்கிளி
“மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் நிவாரணம் கிடைத்திருக்கும்” என்ற எடப்பாடியின் விமர்சனம்?
பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க “அழுத்தம் கொடுப்பது என்று ‘பாதம்தாங்கி’ பழனிசாமி சொல்வது மோடியின் காலுக்கு அழுத்தம் கொடுப்பதையா… அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தாங்கள் செய்த ஊழல்களை மறைக்க ஒன்றிய பா.ஜ.க அரசு சொன்ன அனைத்தையும் கைகட்டி, வாய் பொத்தி கேட்டுச் செய்தவர்கள் தானே பழனிசாமி உள்ளிட்ட அடிமைகள்… அவர்களுக்கு தி.மு.க குறித்துப் பேச எந்த அருகதையும் இல்லை. தமிழ்நாட்டுக்கு உரிய வரிப் பங்கீட்டையும், நியாயமாகக் கிடைக்கவேண்டிய நிவாரணத்தையும் நாங்கள் கேட்கிறோம். தர மறுத்த … Read more
தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: கடலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் மகன் பிடிபட்டார்
சென்னை: தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் ஒருவரது மகன் பிடிபட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கலில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு நேற்று காலை, தொலைபேசியில் பேசிய நபர், ‘‘இன்னும் சற்று நேரத்தில் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும். முடிந்தால் தடுக்கச் சொல்லுங்கள்’’ என்றுகூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு … Read more
ரூ.39,125 கோடியில் ராணுவ தளவாடம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் ஒப்பந்தங்கள்
புதுடெல்லி: சூப்பர்சானிக் வேகத்தில் சென்று தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, கண்காணிப்புக்கான ரேடார் கருவிகள், போர் விமான இன்ஜின் உள்ளிட்ட 5 ராணுவ தளவாடங்களை ரூ.39,125 கோடியில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு படைகளின் திறன்களை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. பாதுகாப்பு படைகளுக்கு தேவையான தளவாடங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தே இந்தியா கொள்முதல் செய்து வந்தது. ஆனால், தற்சார்பு … Read more
பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு தான்… முதல்வர் சித்தராமையா தகவல்..
பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு தான் என்று முதல்வர் சித்தராமையா தகவல் பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் குண்டலஹள்ளி கிளையில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் வெடிகுண்டு வெடித்தது. மதிய நேரம் என்பதால் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்த நேரத்தில் இந்த வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முதலில் ஹோட்டலில் உள்ள சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சக்தி வாய்ந்த … Read more
Congress leaders are furious with the caste census report! Sivasankarappa is unhappy that he made it sitting at home | ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையால் காங்., தலைவர்கள்… ஆவேசம்! வீட்டில் அமர்ந்து தயாரித்ததாக சிவசங்கரப்பா அதிருப்தி
பெங்களூரு : பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் தாக்கல் செய்த, ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை, ஆளும் காங்கிரஸ் கட்சியில் சூறாவளியை கிளப்பியுள்ளது. “வீட்டில் அமர்ந்து தயாரித்த அறிக்கையை தாக்கல் செய்தால், மவுனமாக இருக்கமாட்டோம்,” என, அக்கட்சியின் மூத்த தலைவர் சிவசங்கரப்பா ஆவேசமாக எச்சரித்துள்ளார். கர்நாடகாவில், 2013ல் சித்தராமையா முதல்வராக இருந்தபோது, ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டார். இந்த பொறுப்பை பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையத்திடம் ஒப்படைத்தார். ஆணையத்தின் அன்றைய தலைவர் காந்தராஜு ஆய்வில் ஈடுபட்டார். மக்களை சந்தித்து … Read more
கொச்சி மெட்ரோவில் பயணித்த ஏ.ஆர் ரஹ்மான்
ஏ.ஆர் ரஹ்மான் தமிழ், ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தியது போல மற்ற மொழிகளில் பெரிய அளவில் இசையமைத்தது இல்லை. நீண்ட இடைவெளிக்கு பின் பிரித்விராஜ் நடிப்பில் பிளஸ்சி இயக்கத்தில் உருவாகி வந்த ‛ஆடு ஜீவிதம்' என்கிற படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டதன் மூலம் மலையாளத்தில் மறுபிரவேசம் செய்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான். வரும் மார்ச் 28ம் தேதி ஆடுஜீவிதம் படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் கொச்சிக்கு வருகை தந்த ஏ.ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கான பிரத்யேக வெப்சைட் … Read more