Sathamindri mutham tha review: பதைபதைக்கும் காட்சிகள்.. சத்தம் இன்றி முத்தம் தா படம் சுமாரா? சூப்பரா?

நடிகர்கள்: ஸ்ரீகாந்த்,பிரியங்கா திமேஷ், இயக்கம் : ராஜூ தேவ் இசை: ஜூபின் நடிகர் ஸ்ரீகாந்தின் அட்டகாசமான நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ள சத்தமின்றி முத்தம் தா படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாமா? சத்தமின்றி முத்தம் தா: தமிழ் திரை உலகில் ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இதன்

மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை

சென்னை/ கோவை: மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழகம் வந்துள்ள துணை ராணுவ படையினரை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், முன்னதாகவே சட்டம் – ஒழுங்கு கண்காணிப்புக்காகவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், துணை ராணுவ படையினரை மத்திய உள்துறை தமிழகத்துக்கு அனுப்புகிறது. முதல்கட்டமாக தமிழகத்துக்கு 25 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். இதில், … Read more

“காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வளர்ச்சியின் பெரும் எதிரிகள்” – பிரதமர் மோடி தாக்கு

தான்பாத்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய எதிரிகள்” என்று பேசினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுமார் ரூ,35 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியது: “காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வளர்ச்சிக்கு மிகப் பெரும் எதிரிகள். கடந்த நூற்றாண்டின் இறுதியில் வடக்கு கரண்புராவில் அப்போதைய பிரதமர் அடல் … Read more

பொதுத்தேர்வுகள் முடியும் வரை மின் நிறுத்தம் செய்யத் தடை: தமிழக அமைச்சர் உத்தரவு

சென்னை தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை மின் நிறுத்தம் செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தடை விதித்துள்ளார்.  இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கோடைக்காலத்தின் போது சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் என்றும் தேர்வு … Read more

Siddaramaiah appeals to increase organ donation | உடல் உறுப்பு தானம் அதிகரிக்க சித்தராமையா வேண்டுகோள்

பெங்களூரு : ”உயிர் பறிபோகும் போது, மற்றொருவரின் உயிரை காப்பாற்ற நினைப்பது சாதாரண விஷயமல்ல. உடல் உறுப்பு தானம் அதிகரிக்க வேண்டும்,” என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்திற்கு, சுகாதார துறை சார்பில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, முதல்வரின் அரசு இல்லமான காவேரியில் நேற்று நடந்தது. பாராட்டு சான்றிதழ் வழங்கி முதல்வர் சித்தராமையா பேசியதாவது: உடல் உறுப்பு தானத்தில், நாட்டிலேயே கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. தானம் செய்பவரின் குடும்பம் சந்திக்கும் … Read more

கங்குவா பட காட்சிகளை சென்னை வந்து பார்த்த பாபி தியோல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சூர்யா டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் சென்னை வந்த கங்குவா படத்தின் வில்லனான பாபி தியோல் அப்படத்தின் முக்கிய காட்சிகளை பார்த்து … Read more

யாரடி நீ மோகினி ரீ ரிலீஸ்.. கமலா தியேட்டரில் கண் கலங்கிய மித்ரன் ஜவஹர்.. ரசிகர்கள் அன்பு அப்படி!

சென்னை: மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், ரகுவரன், நயன்தாரா, கருணாஸ், கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2008ம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி இன்று தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது. கமலா சினிமாஸ் ஏற்கனவே யாரடி நீ மோகினி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை ரீ ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்திருந்தார்.

“பாஜகவுக்கு தைரியம் இருந்தால் நிர்மலா, ஜெய்சங்கரை தமிழகத்தில் களமிறக்க தயாரா?” – கே.பி.முனுசாமி சவால்

கிருஷ்ணகிரி: “பாஜகவுக்கு தைரியம் இருந்தால், தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 2 பேரை மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வைக்க முடியுமா?” என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி சவால் விடுத்து உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சூளகிரியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் நடிகர் சிங்கமுத்து பங்கேற்று பேசினார். தொடர்ந்து அதிமுக துணை … Read more

பெங்களூருவின் ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் குண்டுவெடிப்பு: நிகழ்விடத்தில் டி.கே.சிவக்குமார் ஆய்வு

பெங்களூரு: பெங்களூருவில் ஒயிட் பீல்ட் பகுதியில் அமைந்துள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் வெள்ளிக்கிழமை குண்டு வெடித்ததில் 9 பேர் காயமடைந்தனர். இந்த சூழலில் நிகழ்விடத்தில் அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார். “இந்த குற்றச் செயலை செய்த நபருக்கு 30 முதல் 35 வயது வரை இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் ரவை இட்லி வாங்கியுள்ளார். ஆனால், அதை சாப்பிடாமல் பையை வைத்து விட்டு சென்றுள்ளார். அவரை விரைந்து பிடிக்கும் பணியில் போலீஸார் … Read more

இன்று மம்தா பானர்ஜி மோடியைச் சந்திக்கிறார்.

கொல்கத்தா இன்று இரவு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர், ஹுக்ளி மற்றும் நாடியா மாவட்டங்களில் இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். மேலும் பல்வேறு அரசு திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். இன்று இரவு பிரதமர் மோடி கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்க உள்ளார். அப்போது பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநர் மாளிகைக்கு வர உள்ளதாகத் … Read more