'சந்தேஷ்காளி சகோதரிகளை திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய விதம் வெட்கக்கேடானது' – பிரதமர் மோடி
கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலம் அரம்பாக் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது சந்தேஷ்காளி விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது;- “மேற்கு வங்கத்தின் இன்றைய நிலையை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. சந்தேஷ்காளியின் சகோதரிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் செய்ததைப் பார்த்து நாட்டு மக்கள் வருத்தமும், கோபமும் கொண்டுள்ளனர். சந்தேஷ்காளி சகோதரிகளை திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய விதம் வெட்கக்கேடானது. ‘இந்தியா’ … Read more