Month: March 2024
போதைப் பொருள் வழக்கு – இயக்குனர் கிரிஷ் தலைமறைவு?
தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கிரிஷ். தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த 'வானம்' படத்தை இயக்கியவர். கடந்த ஞாயிறன்று ஐதராபாத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருள் உட்கொண்டதாக அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. விசாரணைக்கு வருமாறு அவரை காவல்துறையினர் அழைத்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக அவரது மொபைல் போனை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். அதனால் தலைமறைவு என அவரைப் பற்றி அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் மும்பையில் உள்ளதாகவும் … Read more
தமன்னா நடிக்கும் ஒடேலா 2.. டைட்டில் போஸ்டரே சும்மா மிரட்டலா இருக்கே!
சென்னை: ஒடேலா என்ற கிராமத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒடேலா ரயில் நிலையம் என்ற தலைப்பில் ஆஹா ஓடிடி தளததில் நேரடியாக திரையிடப்பட்டது. இப்படத்தில் ஹெபா பட்டேல், சாய் ரோனக், பூஜிதா பொன்னடா மற்றும் வஷிதா எம் சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மக்களிடம் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஒடேலா
ஜார்க்கண்டில் ரூ.35ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ராஞ்சி, பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜார்க்கண்டில் ரூ,35,700 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அங்குள்ள தன்பாத் மாவட்டத்தில் உள்ள சிந்த்ரி பகுதியில் ரூ.8,900 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஹிந்துஸ்தான் உர்வராக் மற்றும் ரசாயன லிமிடெட் உரத்தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சிந்த்ரியில் நடைபெற்ற விழாவில் பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டு யூரியா உற்பத்தி செய்யும். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: … Read more
500 விக்கெட்டுகள் வீழ்த்துவது ஒன்றும் ஜோக் அல்ல அஸ்வினுக்கு கங்குலி பாராட்டு
தர்மசாலா, இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்திய சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது. இந்திய அணிக்காக இதுவரை 312 … Read more
பிரியாணி கடையில் பயங்கர தீ விபத்து: 43 பேர் பலி
டாக்கா, வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் பெய்லி சாலையில் 7 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வணிக வளாகங்கள், உணவகங்கள், செல்போன் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்துள்ள பிரியாணி கடையில் நேற்று இரவு 10 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரியாணி கடையில் பற்றிய தீ அடுக்குமாடி கட்டிடத்தின் மேல்தளத்திற்கு மளமளவென பரவியது. இதில், அடுக்குமாடி கட்டிடத்தில் மேல்தளத்தில் இருந்த பலர் … Read more
இலங்கையர்களுக்கு ஜப்பானில் கட்டிட சுத்திகரிப்பு துறையில் தொழில் வாய்ப்புகள்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எமது தொழிலாளர்களுக்கு ஜப்பானின் கட்டிட சுத்திகரிப்பு துறையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது . இதற்கானத் தேர்வு எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் (28) ஜப்பான் கட்டிடத் துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தினருக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார். இவ் வாய்ப்புகளை இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கியமைக்காக ஜப்பான் அரசுக்கும் அந்நாட்டின் நீதியமைச்சருக்கு பாராட்டுக்களும் … Read more
சிவகாசி: போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி; வங்கி ஊழியர் உட்பட 2 பேரிடம் விசாரணை!
வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து வங்கிப் பணம் ரூ.7.55 கோடி மோசடி செய்த வங்கி ஊழியர் உட்பட இரண்டு பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசிய அதிகாரிகள், “விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மண்டல மேலாளர் ரஞ்சித் (வயது 45). திருநெல்வேலியை மண்டல கண்காணிப்பு அலுவலகமாக கொண்டு … Read more
திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்க கோரி பேரவைச் செயலரிடம் அதிமுக கடிதம்
சென்னை: திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கக் கோரி சட்டப்பேரவைச் செயலாளரைச் சந்தித்து அதிமுக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. அதிமுக சார்பில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் தளவாய் சுந்தரம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இந்தக் கடிதத்தைக் கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் கூறியது: “இன்று பேரவைத் தலைவருக்கு ஒரு கடிதம் கொடுக்க வந்தோம். ஆனால், பேரவைத் தலைவர் இல்லாத காரணத்தால், பேரவைச் செயலாலளரிடம் அந்தக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில், … Read more
மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு 18 தொகுதிகள்? – இறுதியாகிறது கூட்டணி உடன்பாடு
மும்பை: மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா (யுபிடி), காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ளன. இந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு முடிவடைந்திருப்பதாக தகவல் வெளியாகி … Read more