Mysterious object explodes in Bengaluru hotel | பெங்களூரூ ஓட்டலில் மர்ம பொருள் வெடிப்பு: 8 பேர் காயம்

பெங்களூரூ: கர்நாடக மாநிலம் பெங்களூரூ அருகே இந்திரா நகரில் உள்ள ஓட்டலில் மர்ம பொருள் வெடித்ததில் 8 பேர் காயமுற்றனர். 3 பேரிடம் விசாரணை நடக்கிறது. இந்திரா நகரில் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. வெடித்தது வெடிகுண்டா அல்லது சிலிண்டரா, மர்ம பொருள் ஏதும் வெடித்ததா, வெடிகுண்டு ஏதும் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் போலீசார், தீயணைக்கும் படையினர் குவிந்துள்ளனர். இந்த வெடி விபத்தில் ஓட்டல் … Read more

'வணங்கான்' படத்தில் நடித்தபோது பாலா அடித்து துன்புறுத்தினாரா? : மமிதா பைஜு மறுப்பு

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா, கிர்த்தி ஷெட்டி நடித்தனர். பின்னர் சூர்யா விலகியதை தொடர்ந்து கிர்த்தியும் விலகினார். அதன் பிறகு நாயகி ஆனவர் மலையாள நடிகை மமிதா பைஜூ, அவரும் திடீரென விலக தற்போது அருண் விஜய்யும், ரோஷினி பிரகாஷூம் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்திலிருந்து விலகிய மமிதா பைஜு, பாலா தன்னை அடித்து துன்புறுத்தியதால்தான் படத்திலிருந்து விலகியதாக தெரிவித்த கருத்துக்கள் வைரலாகின. அதில், ‛‛பாலா … Read more

யப்பா.. இதுதான் பக்கா மாஸ்.. ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’.. ரசிகர்கள் குஷி!

சென்னை: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் 11 வருடங்களுக்கு முன்பு மலையாள மொழியில் வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளிக்குவித்த இத்திரைப்படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2013ம் ஆண்டு மோகன்லால், மீனா, ஆஷா சரத் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். ஒரு கொலையை மறைக்க குடும்பமே

முதல் இன்னிங்சில் சுருண்ட நியூசிலாந்து…2-வது நாளில் ஆஸ்திரேலியா தடுமாற்றம்

வெலிங்டன், நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ரன்கள் அடித்திருந்தது. கிரீன் 103 ரன்களுடனும், ஹேசில்வுட் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 4 விக்கெட்டுகளும், வில்லியம் ஒ ரூர்க் மற்றும் ஸ்காட் குகெலீஜ்ன் தலா … Read more

புனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது

புனித ரமழானை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கான இறக்குமதி வரி எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்திற்கு, நாட்டில் தற்போது ஒரு கிலோகிராமுக்கு அறவிடப்படும் 200 ரூபா விசேட வர்த்தக வரி 1 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த நிவாரணத்தைப் பெறுவதற்கு சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மக்களவைத் தேர்தல்: தென்காசியை குறிவைக்கும் வேட்பாளர்கள் யார் யார்? – அரசியல் கட்சிகள் அப்டேட்!

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டுள்ள இந்த சமயத்தில், பிரதான கட்சிகளின் சார்பில் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு விநியோகமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு தி.மு.க., அ.தி.மு.க., தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க-விலும் கடும் போட்டி நிலவுகிறது. திமுக திமுக & கூட்டணி..! இதுபற்றி தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் சிலரிடம் பேசினோம். “தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க-வே மீண்டும் போட்டியிட வேண்டும். அதையே தான் மக்களும் விரும்புகிறார்கள். ஆளும்கட்சி … Read more

பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது. ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகன் தரப்பில், “பெற்றோர் … Read more

“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் காஸ் விலை ரூ.2,000 ஆக உயரும்” – மம்தா விமர்சனம்

மேற்கு வங்கத்தில் ஜார்கிராம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், “வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் காஸ் சிலிண்டர் விலை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உயரலாம். அதன்பிறகு நாம் விறகு அடுப்புக்குத்தான் செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்களை நடத்தி மக்களிடம் உரையாற்றி வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் நடைபெற்றுவரும் கூட்டங்களில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, … Read more

இரண்டாவது குழந்தைக்கு தந்தையானார் 'அயலான்' பட இயக்குனர்

இயக்குனர் ஆர்.ரவிக்குமாருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதை தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வெளியூர் பஸ்களில் முன்பதிவு செய்தவர்கள் ரூ. 40 கட்டணத்தில் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் எந்த இடத்திற்கும் விரும்பியபடி பயணம் செய்யலாம்…

தென் மாவட்ட பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்கள் கூடுதலாக ரூ. 40 கட்டணம் செலுத்தி கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் எந்த இடத்திற்கும் நான்கு மணி நேரம் விரும்பியபடி பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. கிளம்பாக்கத்தில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணம் செய்யும் மக்கள் பல நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏறவேண்டிய நிலை உள்ளது. இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட ரூ. 80 கட்டணத்தில் … Read more