தள்ளுபடியை அள்ளி வீசும் ஜியோ… 50 நாள்களுக்கு இலவசம் – அதுவும் ஐபிஎல் காலத்தில்!

Jio AirFiber 50 Days Free Offer: தொலைத்தொடர்பு துறையில் ஜியோ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பரந்த அளவில் தொலைத்தொடர்பு சேவைகளை இந்தியாவில் வழங்கி வருகிறது. நாடு முழுவதும் 5ஜி இணைய சேவையை ஜியோ நிறுவனமும், ஏர்டெல் நிறுவனமும் மட்டும்தான் வழங்கி வருகின்றன. இதில் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் தனது போட்டியாளர்களை எதிர்கொள்ள பல தள்ளுபடிகளையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.  குறிப்பாக, மொபைல்களுக்கான பிரீபெய்ட் மற்றும் … Read more

அதிமுக கொடியுடன் பாஜக தேர்தல் பிரச்சாரம்

நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் பாஜக பிரச்சாரம் செய்யும் வாகனத்தில் அதிமுக கொடி இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இன்னும் 10 நாட்களில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.  எனவே தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமாகியுள்ளது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பிரசாரத்தைத் தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வகையில், நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல்.முருகனின் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.  இந்நிலையில் அவருடைய பிரசார வாகனத்தில் கூட்டணிக் … Read more

“எங்களை பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற?” பாஜக நிர்வாகிக்கு ஆவேசமாக பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி

சிதம்பரம்: மக்களவை தேர்தலுக்குப் பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது என்று பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். மதுரை லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ள ராம சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். தனது பிரச்சாரத்தின் போது திமுகவை மட்டுமல்லாமல் முன்பு தங்களுடன் Source Link

மீண்டும் இணைந்த தசரா படக் கூட்டணி!

அறிமுக இயக்குனர் ஸ்ரீ காந்த் ஓடிலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'தசரா'. இந்த படம் நானிக்கு முதல் ரூ.100 கோடி வசூலித்த படமாக அமைந்தது. கடந்த சில மாதங்களாக மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. தற்போது அது உறுதியாகியுள்ளது. இன்று தசரா படம் வெளிவந்து ஒரு ஆண்டு ஆனதை முன்னிட்டு நானி, ஸ்ரீ காந்த் ஓடிலா கூட்டணியில் நானியின் 33வது படம் … Read more

அய்யோ கார் எல்லாம் வேண்டாம்.. கொட்டும் மழையில் ஸ்கூட்டரில் சென்ற ரஜினி.. ஏன் தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் இந்தியாவின் மூத்த நடிகர்களில் ஒருவர். கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான ஜெயிலர் படம் வெற்றியையும், கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படம் தோல்வியையும் சந்தித்தன. தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171

`என்னை மன்னித்து விடுங்கள்' – பெற்றோருக்கு மெசேஜ்; பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மாணவி தற்கொலை!

ஆந்திராவில் 17 வயது மாணவி, தன்னை சிலர் பாலியல் துன்புறுத்தல் செய்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவைத்து மிரட்டுவதாகக் குற்றம்சாட்டி, பெற்றோர் மற்றும் சகோதரிகளுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில், பாதிக்கப்பட்ட மாணவி விசாகப்பட்டினத்தில் பாலிடெக்னிக் கல்லூரியொன்றின் விடுதியில் தங்கிப் படித்து வந்திருக்கிறார். தற்கொலை இந்த நிலையில், அனகாபல்லி மாவட்டத்தில் வசிக்கும் மனைவியின் குடும்பத்தினருக்கு கல்லூரி நிர்வாகத் தரப்பிலிருந்து கடந்த வியாழக்கிழமை இரவு 10 … Read more

கூட்டணிக் கட்சிக்காக விருதுநகரை விட்டுக்கொடுத்த பிரதான கட்சிகள்: களத்தில் கடும் போட்டி

விருதுநகர்: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் விருதுநகர் தொகுதியை கூட்டணிக் கட்சிக்காக கொடுத்துள்ளன. பாஜகவும் சமகவிலிருந்து வந்த நடிகை ராதிகாவை களமிறக்கியுள்ளது. இதனால், தேர்தல் களத்தில் கடும் போட்டியில் வேட்பாளர்கள் இறக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளும், மதுரை மாவட்டத்துக்கு உட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதிகளில் விருதுநகர், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளை திமுகவும், சாத்தூரை … Read more

“திட்டமிட்ட பிரச்சாரம்…” – பிரதமரின் கச்சத்தீவு குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி: காங்கிரஸ் அரசு அநாவசியமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு, “இது தேர்தல் வேளையில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்சாரம் என்று காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. மேலும் கடந்த பத்து ஆண்டுகளில பாஜக தலைமையிலான அரசின் பணிகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்தீப் திக்ஷித் கூறுகையில், “நமது பிரதமரின் பிரச்சினையே அவர் எந்தவிதமான ஆதாரங்களும் இன்றி அறிக்கைகள் வெளியிடுகிறார். அவர் குறிப்பிடுவது போல் … Read more

சிறையில் இருந்தே தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் – என்னென்ன தெரியுமா?

Arvind Kejriwal News: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலை முன்னிட்டு ஆறு வாக்குறுதிகளை வழங்கி உள்ளார். அதனை இங்கு காணலாம். 

எனது குரலை பாஜகவால் ஒடுக்க முடியாது : ராகுல் காந்தி

டில்லி தமது குரலை பாஜகவால் ஒடுக்க முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராம்லீலா மைதானத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ராகுல்காந்தி தனது உரையில்,– ”காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. … Read more