கவுகாத்தி,
திடீர் கனமழை மற்றும் சூரை காற்றினால் கவுகாத்தி சர்வதேச விமான நிலையம் சேதமடைந்தது, இதனால் விமானங்களின் புறப்பாடு தாமதமானது. மேலும் விமான முனையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் அதிகாரிகள் ஆறு விமானங்களை வேறு இடங்களுக்கு திருப்பிவிட்டனர். விமான நிலைய முனையத்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் கடுமையாக அவதியடைந்தனர்.
இந்நிலையில் புயலைத் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக விமானநிலைய மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :