எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாரச் 2024 விற்பனை 23 % வீழ்ச்சி அடைந்திருந்தாலும் ஒட்டு மொத்த 2023-2024 ஆம் நிதியாண்டின் விற்பனை முந்தைய நிதி வருடத்துடன் ஒப்பீடுகையில் 14 % வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்ஜி கடந்த ஆண்டு இதே மாதத்தில் 6,051 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், இந்த மார்ச் மாதத்தில் சில்லறை விற்பனையில் 23 சதவீதம் சரிவடைந்து 4,648 யூனிட்டுகளாக மட்டுமே பதிவாகியுள்ளது.
2023-24 நிதியாண்டில், 2022-23 நிதியாண்டில் விற்பனையில் ஆண்டு வளர்ச்சியில் சுமார் 14 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக எம்ஜி தெரிவித்துள்ள நிலையில் விற்பனை எண்ணிக்கை விபரத்தை பகிர்ந்து கொள்ளவில்லை. இருந்தாலும் தோராயமாக 55,000 வாகனங்களை விற்பனை செய்திருக்கலாம்.
சமீபத்தில் எம்ஜி மோட்டார் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதால் வரும் மாதங்களில் காலாண்டிற்கு ஒரு மாடல் என எலக்ட்ரிக், ICE என இரண்டிலும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் நடந்த சிறப்பு சந்திப்பில் தெரிவித்திருந்தது. இந்நிறுவனம் எம்ஜி காமெட் இவி, ஹெக்டர், இசட்எஸ் இவி , ஆஸ்டர், குளோஸ்டெர் உள்ளிட்ட மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.