ஏப்ரல் 3 ஆம் தேதி டொயோட்டா Taisor அறிமுகமாகிறது

மாருதி ஃபிரான்க்ஸ் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட டொயோட்டா டைசோர் க்ராஸ்ஓவர் காரின் அறிமுக தேதியை உறுதி செய்து முதல் டீசர் வெளியிடப்பட்டுளதால் விற்பனைக்கு நடப்பு மாத இறுதியில் கிடைக்க துவங்கலாம்.

மிக அமோகமாக வரவேற்பினை பெற்ற பலேனோ (டொயோட்டா கிளான்ஸா) அடிப்படையில் மாருதி சுசூகி தயாரித்துள்ள Fronx காரில் இருந்து மாறுபட்ட முகப்பு கிரில் உட்பட புதிய அலாய் வீல், இன்டிரியர் உள்ளிட்ட பகுதிகளில் என சிறிய அளவிலான மாற்றங்கள் பெற்றதாக டைசோர் அமைந்திருக்கலாம்.

தற்பொழுது வரை டொயோட்டா Taisor பற்றி கிடைத்த சில முக்கிய அம்சங்கள்

  • வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள டைசோர் விலை ரூ.8 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளது.
  • 1.2  லிட்டர் பெட்ரோல் அல்லது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மட்டுமல்லாமல் சிஎன்ஜி என இரு விதமான எரிபொருள் ஆப்ஷனை பெறக்கூடும்.
  • அதிகபட்சமாக 100 PS பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
  • 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp வெளிப்படுத்தும் மாடல் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற உள்ளது.
  • சிஎன்ஜி பயன்முறையில்  77.5hp பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்குகின்றது.
  • சிஎன்ஜி ஆப்ஷன் அதிகபட்சமாக ஒரு கிலோ எரிபொருளுக்கு 28.51km/kg வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பில் மிக நேர்த்தியாக சில மாறுதல்களை டொயோட்டாவிற்கு உரித்தான சில அம்சங்களுடன் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்ற முன்பக்க கிரில் பெறுவதுடன் எல்இடி ஹெட்லைட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் பெற்றிருக்கும். இன்டிரியரில் சிறிய அளவிலான டேஸ்போர்ட் நிற மாற்றங்களுடன் அப்ஹோல்ஸ்ட்ரி புதியதாக மாற்றப்பட்டு டொயோட்டா லோகோ பெற்றிருக்கும்.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற ரூ. 8 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை விலையில் கிடைக்கின்ற மாடல்களுடன் மாருதி ஃபிரான்க்ஸ் உட்பட 4 மீட்டருக்கு குறைந்த நீளம் மாருதி பிரெஸ்ஸா, டாடா பஞ்ச், ஹூண்டாய் வெனியூ, கியா சோனெட் ஆகியவற்றை எதிர்கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.