கியா வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான செல்டோஸ் காரில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள HTK மற்றும் HTK+ வேரியண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான ஆப்ஷனிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக வந்துள்ளது.
புதிய செல்டோஸ் HTK+ பெட்ரோல்-சிவிடியின் விலை ரூ.15.40 லட்சமாகவும், செல்டோஸ் HTK+ டீசல் ஆட்டோமேட்டிக் விலை ரூ.16.90 லட்சமாகவும் உள்ளது. கூடுதலாக துவக்க நிலை HTE வேரியண்டில் 5 நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
2024 கியா செல்டோஸ் பெற்ற மாற்றங்கள் பின் வருமாறு;-
- துவக்க நிலை செல்டோஸ் HTE வகையில் அரோரா பிளாக் பேர்ல், கிராவிட்டி கிரே, இன்டென்ஸ் ரெட், பியூட்டர் ஆலிவ் மற்றும் இம்பீரியல் ப்ளூ என 5 வண்ணங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
- HTK வேரியண்டில் கூடுதலாக ஸ்டார் மேப் எல்இடி ரன்னிங் விளக்குகள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் கொண்ட ஸ்மார்ட் கீ மற்றும் எல்இடி டெயில் பார் லைட் உள்ளது.
- HTK+ வேரியண்டுகளில் டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப், டிரைவ் மற்றும் டிராக்சன் கண்ட்ரோல் மோடு, பேடல் ஷிஃப்டர் மற்றும் ஸ்டார் மேப் எல்இடி பார் இணைக்கப்பட்ட டெயில்லேம்ப் பெற்றுள்ளது.
- டாப் HTX, HTX+, GT Line மற்றும் X Line வகைகளில் கூடுதலாக தானாகவே மேல் ஏறும் மற்றும் இறங்க்கும் தன்மை பெற்ற வசதி 4 விண்டோஸ்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மற்றபடி, எந்த எஞ்சின் ஆப்ஷன் மாற்றமும் கியா செல்டோஸ் காரில் வழங்கப்படாமல் தொடர்ந்து 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ளது.
இந்தியாவில் கியா செல்டோசின் விலை ரூ.10.90 லட்சம் முதல் ரூ.20.35 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை அமைந்துள்ளது. ஆட்டோமேட்டிக் வேரியண்ட் கூடுதலாக முந்தைய மாடல்களை விட குறைவான விலையில் துவங்குவதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையலாம்.
செல்டோஸூக்கு போட்டியாக ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், வரவிருக்கும் ஹோண்டா எலிவேட், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் உள்ளன.