கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் வீ.முரளிதரன் ஆற்றிங்கல் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். தனது வேட்புமனுவில் இணைத்துள்ள அபிடவிட்டில் தனக்கு சொந்தமாக வீடு, நிலம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். தனது கையில் ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளதாகவும், தனது வங்கி கணக்கில் மத்திய அமைச்சருக்கான சம்பளமாக வந்த வகையில் 10,44,274 ரூபாய் உள்ளதாகவும் கூறியுள்ளார். அவருக்கு சொந்தமாக 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் உள்ளதாகவும், 6 கிராம் மோதிரம் அணிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 1,11,865 ரூபாய்க்கான ஹெல்த் இன்ஸூரன்ஸ் எடுத்துள்ளதாகவும். 83,437 ரூபாய்க்கான வங்கிக்கடன் செலுத்தவேண்டியது உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மனைவியின் கையில் 3000 ரூபாய் மட்டுமே உள்ளது. மனைவிக்கு மூன்று வங்கி கணக்குகளில் 20,27,136 ரூபாய் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மனைவியின் 15,41,000 மதிப்புள்ள கார், 164 கிராம் தங்க நகைகள் எல்லாம் சேர்த்து 46,76,824 ரூபாய்க்கான சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சி.பி.எம் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான டி.எம். தாமஸ் ஐசக் நான்காவது முறையாக எம்.எல்.ஏ-வாக உள்ளார். 2006-2011 காலகட்டத்திலும், கடந்த 2016-2021 பினராயி விஜயன் ஆட்சியிலும் நிதித்துறை அமைச்சராக இருந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் சி.பி.எம் சார்பில் பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் தன்னிடம் 20,000 புத்தகங்கள் உள்ளதாகவும், அதன் மதிப்பு 9,60,000 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.
சொந்தமாக வீடும் இல்லை நிலமும் இல்லை என குறிப்பிட்டுள்ள தாமஸ் ஐசக், தனது புத்தகங்களை தம்பியின் வீட்டில் வைத்து பாதுகாப்பதாக தெரிவித்துள்ளார். கையிருப்பாக உள்ள 10,000 ரூபாய், வங்கி லணக்குகளில் உள்ள தொகை, புத்தகங்களின் மதிப்புக்களையும் சேர்த்து மொத்தம் தன்னிடம் 13,38,909 மதிப்புள்ள சொத்துக்கள் தன்னிடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கொல்லம் எம்.எல்.ஏ-வாக உள்ள நடிகர் முகேஷ் கொல்லம் நாடாளுமன்ற தொகுதி சி.பி.எம் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். நடிகர் முகேஷ் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் அவருக்கு 14,98,08,376 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2021 சட்ட சபை தேர்தலில் 10.22 கோடி ரூபாய் சொத்துமதிப்பு உள்ளதாக கூறியிருந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. கொல்லத்தில் அவர் வசிக்கும் வீடு மற்றும் சென்னையில் 2 பிளாட்டுகளும் உள்ளதாக அபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில் தேவிகாவுடனான விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY