பிரசத்தி பெற்ற யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா 2023-2024 நிதியாண்டில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை 4,59,877 யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளது. இது முந்தைய 2022-2023 ஆம் நிதியாண்டை விட 28 % வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 2022-2023 விற்பனையில் 3,59,253 யூனிட்டுகளை பதிவு செய்திருந்தது. ஆனால் ஏற்றுமதி சந்தையில் 23 % இழப்பை சந்தித்து 24,663 யூனிட்டுகளை மட்டுமே ஏற்றுமதி சந்தையில் விற்பனை செய்துள்ளது.
வர்த்தக விற்பனையில் 2024 நிதியாண்டில், 2,62,810 யூனிட்களாக இருந்தது, இது முந்தைய நிதியாண்டை விட 5.7 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், மூன்று சக்கர வாகன விற்பனை முந்தைய நிதியாண்டை விட 58,520 யூனிட்களாக இருந்து FY24ல் 77,589 யூனிட்களாக விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளது.
மஹிந்திரா ஒட்டுமொத்த வாகன விற்பனையில் மார்ச் மாதத்தில் மொத்த மொத்த விற்பனை ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரித்து 68,413 ஆக உள்ளது. மார்ச் 2023ல் நிறுவனத்தின் மொத்த விற்பனை 66,041 ஆக இருந்தது.
உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை கடந்த 2023 மார்ச் மாதத்தில் 35,997 ஆக இருந்த நிலையில், கடந்த 2024 மார்ச் மாதம் 13 சதவீதம் அதிகரித்து 40,631 ஆக பதிவாகியுள்ளது.
M&M Ltd, வாகனப் பிரிவின் தலைவர் வீஜய் நக்ரா கூறுகையில், “இந்தியாவில் லோட் செக்மென்ட்டில் எந்த வணிக வாகனங்களுக்கும் இல்லாத அளவுக்கு மஹிந்திரா பிக்அப் டிரக்குகள் இந்த ஆண்டில் 2 லட்சம் யூனிட்களைத் தாண்டியதன் மூலம் F24 நிதியாண்டை ஒரு வளர்ச்சி பாதையில் பயணித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.