ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் எஸ்யூவி மாடல்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பதுடன், 6 ஏர்பேக்குகள் மற்றும் 5 இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர் இணைக்கப்படுள்ளது.
குறிப்பாக ஆரம்ப நிலை ஹோண்டா அமேஸ் செடானில் 6 ஏர்பேக்குகள் இணைக்கப்பட்டிருப்பதுடன் துவக்க நிலை E வேரியண்ட் நீக்கப்பட்டு S மற்றும் VX வேரியண்டுகள் மட்டுமே கிடைக்கின்றது.
1.2 லிட்டர் i-VTEC எஞ்சினை பெறுகின்ற இந்த மாடலில் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. அமேசின் ஆரம்ப விலை ரூ.7.93 லட்சம் முதல் டாப் வேரியண்ட் VX CVT விலை ரூ.9.86 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.
பிரசத்தி பெற்ற சிட்டி செடானின் 1.5L i-VTEC எஞ்சின் பெற்றுள்ள மாடலின் ஆரம்ப விலை ரூ.12.08 லட்சம் முதல் ரூ.16.35 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக வலுவான ஹைபிரிட் பெற்ற City e:HEV தற்பொழுது ஒற்றை வேரியண்டில் மட்டும் கிடைப்பதனால் விலை ரூ.20,55,100 ஆக உள்ளது.
அடுத்து, சமீபத்தில் வந்த சி-பிரிவு எஸ்யூவி ஹோண்டா எலிவேட் விலை ரூ.30,000 வரை அதிகரிக்கப்பட்டு தற்பொழுது ரூ.11.91 லட்சம் முதல் ரூ.16.43 லட்சம் வரை கிடைக்கின்றது. விற்பனைக்கு வந்த நாள் முதல் தற்பொழுது வரை சுமார் ரூ.91 ஆயிரம் வரை துவக்க நிலை எலிவேட்டின் விலை உயர்ந்துள்ளது.
தனது அறிக்கையில் 2050 ஆம் ஆண்டுக்குள் ஹோண்டா ஆட்டோமொபைல் சம்பந்தப்பட்ட வாகனங்களில் பூஜ்ஜிய விபத்து இறப்புகளை உறுதி செய்யும் உலகளாவிய கொள்கையுடன், கூடுதலாக சேர்க்கப்பட்ட வசதிகள் முக்கிய பங்காற்றும் என குறிப்பிட்டுள்ளது.