இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் இந்தியா FY 23-24 நிதியாண்டில் சுமார் 7,77,876 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் 7,20,565 யூனிட்டுகளுடன் ஒப்பீடுகையில் 8 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டில் ஹூண்டாய் 2023-2024 ஆம் நிதியாண்டில் 6,14,721 யூனிட்டுகளும், கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் 5,67,546 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது. ஏற்றுமதி சந்தையில் 2022-23 நிதியாண்டில் 1,53, 019 யூனிட்களாக இருந்த எண்ணிக்கை 7 சதவீதம் உயர்ந்து 1,63,155 யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையில் கிரெட்டா எஸ்யூவி அமோக வரவேற்பினை பெற்ற மாடலாக தொடர்ந்து விளங்கி வருகின்றது. இதனை தொடர்ந்து கிராண்ட் ஐ10 உட்பட எக்ஸ்டர் போன்ற மாடல்கள் விற்பனைக்கு உறுதுனையாக உள்ளது.
கடந்த மார்ச் 2024ல் 65,601 பதிவு செய்து விற்பனை முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 7 சதவீதம் அதிகரித்து மார்ச் 2023ல் 61,500 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
7.77 லட்சம் விற்பனை எண்ணிக்கை மூலம் பல்வேறு தயாரிப்பு வரிசைக்கு பெரும் வரவேற்பு உள்ளதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் சிஓஓ தருண் கார்க் குறிப்பிட்டுள்ளார்.