ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு இடையே யூசர்களை பிடிப்பதில் மெகா யுத்தமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால், தங்களின் ரீச்சார்ஜ் பிளான்களுடன் ஓடிடி சேவைகளையும், கவர்ச்சிகரமான கூடுதல் சலுகைகளையும் கொடுத்து யூசர்களை இழுத்து வருகின்றனர் இந்த மூன்று டெலிகாம் நிறுவனங்களும். குறிப்பாக, ஓடிடி யுகத்தில் அந்த யூசர்களை பிடிக்க மூன்று நிறுவனங்களும் கச்சிதமான பிளான்களை மார்க்கெட்டில் இறக்கியிருந்தாலும் இதில் ஒரு அடி முன்னால் இருக்கிறது ஏர்டெல். அம்பானியின் ஜியோ நிறுவனத்துக்கே ஷாக் கொடுக்கும் வகையில் 20 ஓடிடி சேவைகளை வெறும் 150 ரூபாய் விலைக்குள் கொடுக்கிறது.
ஏர்டெல்லின் ரூ.148 திட்டம்
ஏர்டெல்லின் இந்த திட்டத்தைப் பற்றி தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். 148 ரூபாய் திட்டத்தில் 15 ஜிபி டேட்டா கிடைக்கும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளேக்கு 28 நாட்களுக்கு இலவச சப்ஸ்கிரிப்சனும் கூடுதலாக கிடைக்கும். கூடுதல் சிறப்பு என்னவென்றால், Sony Liv மற்றும் Lionsgate Play உள்ளிட்ட 20 OTT செயலிகளுக்கான இலவச அணுகல் கிடைக்கும். இந்த டேட்டா திட்டத்தில் பயனர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் இலவச SMS நன்மைகளைப் பெற முடியாது. இந்த திட்டத்துக்கு போட்டியாக வோடாஃபோன் ஐடியா மற்றும் ஜியோவின் பிளான்களை பார்க்கலாம்.
வோடாஃபோன் ஐடியா ரூ.169 பிளான்
Vodafone-Idea (Vi) ரூ.169 திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும். மொத்தம் 8 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது OTT நன்மைகளுடன் வருகிறது. இதில் 90 நாட்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைலின் இலவச சந்தாவைப் பெறுவீர்கள். ஜியோ மற்றும் ஏர்டெல்லின் ரூ.148 டேட்டா திட்டத்துடன் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் ஏர்டெல்லுடன் ஒப்பிடும்போது குறைவான சேவைகளையே கொடுக்கிறது. அதனால் இந்த வாடிக்கையாளர்களுக்கு, ஏர்டெல்லை ஒப்பிடும்போது கொஞ்சம் ஏமாற்றம் வரலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.148 டேட்டா திட்டம்
ஜியோவின் இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் இணையத்தைப் பயன்படுத்த 10 ஜிபி அதிவேக டேட்டாவைப் பெறுவீர்கள். இந்த திட்டம் 12 OTT பயன்பாடுகளுக்கான இலவச சப்ஸ்கிரிப்சன் உள்ளது. சோனி லிவ், ஜீ5, டிஸ்கவரி பிளஸ் மற்றும் லயன்ஸ்கேட் ப்ளே ஆகியவை இதில் அடங்கும். இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு ஜியோ சினிமா பிரீமியத்திற்கும் நிறுவனம் இலவச அணுகலை வழங்குகிறது என்பது சிறப்பு. திட்டத்தில் வழங்கப்படும் டேட்டா வரம்பை தாண்டிய பிறகு, இணைய வேகம் 64Kbps ஆக குறையும். பயனர்கள் தங்கள் வழக்கமான திட்டத்துடன் இந்தத் திட்டத்தைச் கூடுதலாக சேர்க்கலாம்.