கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் அட்டவணை படி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 17-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுவதாக உள்ளது. ஆனால் ராம நவமி கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி வேறு இடத்துக்கோ அல்லது மற்றொரு தேதிக்கோ மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ராம நவமி திருவிழா காரணமாக கிரிக்கெட் போட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பதில் பிரச்சினை நிலவுகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தினர் கொல்கத்தா போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும், இதன் முடிவில்தான் இந்த ஆட்டம் அட்டவணை படி திட்டமிட்டபடி நடைபெறுமா? அல்லது மாற்றம் செய்யப்படுமா? என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.