கொம்புத்தாரை, கரகாட்டம்… களைகட்டிய பிரசாரம் | கனிமொழி காரை சோதனையிட்ட அதிகாரிகள் – Election Clicks

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து திருச்சுழியில் பிரசாரம்
வடசென்னை வேட்பாளரை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரசாரம்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி குன்னூர், சேலாஸ் பகுதியில் திமுக வேட்பாளர் ஆ. ராசா தேர்தல் பிரசாரம்
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா, ஒட்டன்சத்திரம் அருயுள்ள அத்திக் கோம்பை பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் விவசாயிகளுடன் சேர்ந்து களை எடுத்து, மருந்து தெளித்து வாக்கு சேகரித்தார்.
ராமேஸ்வரம் – மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீடு – ஓ.பன்னீர்செல்வம்
காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், இன்று காலை வண்டலூர் இரணியம்மன் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பிரசாரம்
தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, இஸ்லாமிய சமூகத்தினரிடையே வாக்கு சேகரிப்பு
மூன்று கடல்கள் சங்கமிக்கும் ராமேஸ்வரம் அரிச்சல் முனை கடல் பகுதியில் `தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்’ என்ற வாசகம் தாங்கிய விழிப்புணர்வு பதாகை முன் சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
நெல்லை – கனிமொழி எம்.பி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சென்ற காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
புதுச்சேரியில் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இன்று தேர்தல் அரிகாரிகள் முன்னிலையில் வீட்டிலிருந்தே வாக்களித்தனர்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி பெருந்துறை, சென்னிமலை பகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்
சேலம் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பிருந்தா தேவி, தேர்தலில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கினார்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி.
100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தருமபுரியில் மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்பு
தஞ்சை – திமுக., வேட்பாளர் முரசொலியை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பிரசாரம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.