வேலூர்: தேர்தல் பிரசாரத்திற்காக வேலூரில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள சிஎம்சியில்சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகியின் மகன் துரை தயாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 2023 டிசம்பர் 6-ஆம் தேத சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக […]
