
'சென்னை ஸ்டோரி' படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன்
பிலிப் ஜான் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன் நடிக்கும் சர்வதேசத் திரைப்படமான 'சென்னை ஸ்டோரி' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. திமேரி என் முராரி எழுதிய 'தி அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம் இது.
இந்தக் காலத்து காதல், காமெடி கலந்த படமாக சென்னை பின்னணியில் இப்படம் உருவாக உள்ளது. தனியார் துப்பறியும் நிபுணர் அனு என்ற கதாபாத்திரத்தில் ஸ்ருதி நடிக்கிறார்.
“புதிய நாள், புதிய படம், புதிய எனர்ஜி, நன்றி,” என பூஜை மற்றும் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் ஸ்ருதி.
இப்படத்தில் ஆங்கிலேயே நடிகர் விவைக் கல்ரா மற்றும் கெவின் ஹார்ட், வின்சென் டி ஓனோபிரியோ, ஜீன் ரெனோ, சாம் வொர்த்திங்டன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சென்னை மற்றும் கார்டிப் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.