டெல்லி: தவறான விளம்பரங்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில், இன்று உச்சநீதிமன்றத்தில், நேரில் மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்-ஐ கடுமையாக விமர்சனம் செய்த நீதிபதிகள், இவர்கள் மன்னிப்பு கோரியது உதட்டளவிலானது என்று கூறியதுடன், இதுதொடர்பாக ஒரு வாரத்திற்குள் பிரம்மான பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. முன்னதாக, பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் வெளியிடுவது குறித்து உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்காததால், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் மார்ச் 19ந்தேதி அதிரடி […]
