கியா நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான கேரன்ஸ் எம்பிவி மாடலில் கூடுதலாக டீசல் மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட பல்வேறு வேரியண்டுகளில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு மொத்தமாக 30 வேரியண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிதாக இணைக்கப்பட்டுள்ள Premium (O), Prestige (O), மற்றும் Prestige+ (O) என மூன்று வேரியண்டுகள் சேர்க்கப்பட்டிருப்பதுடன் டாப் எக்ஸ்-லைன் வேரியண்டில் டேஷ்கேம் மற்றும் 7 இருக்கை வகை ஆப்ஷனலாக உள்ளது.
MY2024 Kia Carnes
கேரன்ஸ் 2024 மாடலில் தொடர்ந்து 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன் பெற்றதாக உள்ளது.
1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது.
இறுதியாக, கேரன்ஸ் டீசல் காரில் 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ், 6 வேக iVT மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது.
புதிய கேரன்ஸ் வேரியண்ட் வசதிகள் பின் வருமாறு ;-
- Premium (O) வேரியண்டில் கீலெஸ் என்ட்ரி, 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ஸ்டீயரிங் வீல் மவுண்டட் சுவிட்சுகள் மற்றும் பர்க்லர் அலாரம் ஆகியவற்றைப் பெறுகிறது.
- Prestige (O) வகையில் 6- அல்லது 7-இருக்கை ஆப்ஷன், லெதரெட் சுற்றப்பட்ட கியர் நாப், புஷ் பட்டன் வசதியுடன் ஸ்மார்ட் கீ, எல்இடி விளக்குகள் மற்றும் பொசிஷனிங் லேம்ப் ஆகியவற்றை பெறுகிறது.
- ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே கிடைக்கும் Prestige+ (O) வேரியண்டில், எல்இடி விளக்கு மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் பெறுகிறது.
- புதிதாக Pewter Olive நிறத்தை பெறுகின்றது.
- புதிதாக வந்துள்ள டீசல் மேனுவல் விலை ரூ.12.67 லட்சத்தில் துவங்குகின்றது.
கியா கேரன்ஸ் விலை ரூ.10.52 லட்சம் முதல் ரூ.19.67 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை கிடைக்கின்றது.