சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2023 போட்டியில் கோப்பையை வென்று இருந்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற பைனல் போட்டியில் குஜராத் அணியை தோற்கடித்து ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது சென்னை அணி. கடந்த சீசன் உடன் தோனி ஓய்வு பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இன்னும், ஒரு வருடம் தனது ரசிகர்களுக்காக விளையாட உள்ளேன் என்று தெரிவித்திருந்தார். மேலும் அவருக்கு முட்டியில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது, இதனால் கடந்த வருடம் முழுவதும் ஓய்வில் இருந்து வந்தார் தோனி. ஐபிஎல் 2024 போட்டி தொடங்கும் ஒரு நாளுக்கு முன் தோனி தனது கேப்டன் சி பதவியை ருத்ராஜ் கெய்காட்விடம் ஒப்படைத்தார். இதனை யாரும் எதிர்பார்க்காததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.
இதன் மூலம் இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெற உள்ளார் என்பது அனைவருக்கும் தெளிவாக புரிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் தோனி பேட்டிங் செய்ய வரவில்லை. முதல் போட்டியில் விக்கெட்கள் விழவில்லை என்றாலும் இரண்டாவது போட்டியில் கடைசி ஓவரில் தோனி இறங்க வாய்ப்பு இருந்த போதிலும் ஜடேஜா மற்றும் சமீர் ரிஸ்வியை இறக்கினார்கள். இதனால் இந்த சீசன் முழுவதும் தோனி பேட்டிங் செய்ய வர மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றதால் புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும் இருந்தது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்கியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
MS Dhoni sparked injury concern as he was visibly limping while wearing an ice pack on his leg after the match against Delhi Capitals.
– Thala Dhoni …..!!!!!!! pic.twitter.com/IiufXdmB6S
— Jay Crick) April 1, 2024
இந்நிலையில் சென்னை அணி தோற்கும் நிலையில் இருந்த போது களமிறங்கிய தோனி வந்த முதல் பந்திலயே பவுண்டரி அடித்தார். வெறும் 16 பந்திகளில் 37 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் தோனி. கிட்டத்தட்ட 300 நாட்களுக்குப் பிறகு டி20 போட்டிகளில் விளையாடினாலும் அதே பழைய பார்மில் இருந்தார் தோனி. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனாலும் அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் இருந்த ஊழியர்களுடன் தோனி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது காலில் அடிபட்டது போல கட்டு கட்டி இருந்தார். மேலும் நடப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டார் தோனி. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் தோனியின் விளையாடுவது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்குவது கேள்விக்குறி தான் என்று கூறப்படுகிறது. ஒருவேளை காலில் வலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் வேறொரு விக்கெட் கீப்பர் சென்னை அணியில் இடம் பெறலாம். தோனி தனது கடைசி போட்டியை சென்னையில் தான் விளையாடுவேன் என்று கூறி இருந்தார். தற்போது அடிபட்டுள்ளதால் மீதமுள்ள போட்டியில் இருந்து ஓய்வு எடுத்து கொள்வாரா என்று ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மேலும் பவுண்டரி, சிக்ஸ் மட்டுமே அடிக்க முயற்சி செய்கிறார் தோனி. சிங்கிள் எடுக்க கூட முயற்சி செய்யவில்லை. காலில் உள்ள காயம் காரணமாக தான் ரன்கள் ஓட முயற்சி செய்யவில்லையா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது.