சமீபத்தில் பலேனோ காருக்கு மாருதி திரும்ப அழைக்கும் அழைப்பை விடுத்திருந்த நிலையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட டொயோட்டா கிளான்ஸா காரிலும் உள்ள எரிபொருள் மோட்டார் பம்பில் உள்ள கோளாறினை நீக்க 2,305 கார்களை நாடு முழுவதும் திரும்ப அழைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 2, 2019, முதல் அக்டோபர் 6, 2019 வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களில் இடம்பெற்றுள்ள ஃப்யூவல் மோட்டார் பம்பில் (Fuel Pump Motor component) உள்ள பிரசன்னையின் காரணமாக வாகனம் ஸ்டார்ட் செய்யும் பொழுது சிரமங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாதிப்படைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு இலவசமாக மாற்றி தர டீலர்கள் மூலம் அழைப்புகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா கிளான்ஸா E, S, G, மற்றும் V என நான்கு வகைகளில் வழங்கப்படுகிறது,1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களில் ரூ. 6.86 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் விலை தொடங்குகிறது. இன்றைக்கு டொயோட்டா டைசர் விற்பனைக்கு வெளியாகிறது.