நடிகர் சூர்யா தன் குழந்தைகள், மனைவி ஜோதிகாவுடன் கடந்த ஆண்டு மும்பையில் குடியேறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் ஸ்வீட் காதல் ஜேடியாக இருந்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் இருவருமே தற்போது பிஸியாக நடித்துவருகிறார்கள். இந்நிலையில், இருவரும் சேர்ந்து ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்த வீடியோவை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் முதலில் இருவரும் சேர்ந்து நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். அதில் இருவரும் முதலில் பெல்ட் கட்டிக்கொண்டு நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர் அதன் பிறகு புல்லப்ஸ் எடுக்கின்றனர்.
கணவர் சூர்யா உதவியுடன் ஜோதிகா தலைகீழாக நின்ற படி உடற்பயிற்சி செய்கிறார். பின்னர் இடுப்பில் பெல்ட் கட்டிக்கொண்டு இருவரும் சேர்ந்து எதிர் எதிர் திசையில் நடைபயிற்சி உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். இது தவிர இருவரும் தனித்தனியாக பழு தூக்குதல், ஸ்கிப்பிங், நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். ஜோதிகா இந்த வீடியோவை வெளியிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி, இரட்டை பொழுதுபோக்கு என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார். ஜோதிகா வெளியிட்ட வீடியோ சிறிது நேரத்தில் வைரலானது. சைத்தான் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த ஆர்.மாதவன் மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டி ஆகியோர் ஜோதிகாவை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இணைந்து 7 படங்களில் நடித்திருக்கின்றனர். அதோடு இருவரும் சேர்ந்து சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு, ஜோதிகா அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசினார். அதில்,”ஒருவர் தனது பார்ட்னரை மதிப்பதும் பாராட்டுவதும் முக்கியம். உங்கள் பார்ட்னரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்களை மதிக்கும்போதும், பாராட்டும்போதும் காதல் என்பது தானாக நிகழும் ஒன்று” என்கிறார்.