புதுடெல்லி காங்கிரஸில் இருந்து விலகிய பிரபல குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த மக்களவைத் தெர்தலுக்கு முன்பு பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2019 தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். நடைபெற உள்ள தேர்தலில், உ.பி.,யின் மதுரா தொகுதியில் நடிகை ஹேமாமாலினியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் விஜேந்தர் சிங் களமிறங்குவார் என கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டு வந்தது. இன்று, குத்துச்சண்டை வீரர் […]