கில்லி ரீ-ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
கடந்த 2004ல் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'கில்லி'. இது தெலுங்கில் வெளிவந்த ஒக்கடு என்கிற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய காலகட்டத்தில் அதிகளவில் வசூலித்த தமிழ் படமாக இருந்தது. வித்யாசாகர் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.
கடந்த சில வாரங்களாக இப்படம் ரீ ரிலீஸ் ஆகிறது என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. தற்போது கில்லி படம் வருகின்ற ஏப்ரல் 20ம் தேதி அன்று ரீ-ரிலீஸ் ஆகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் இப்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.