புதுடெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவல் கைது நடவடிக்கைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. கடந்த 21- ஆம்தேதி. டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து 22-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை 28 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி […]