இந்தியாவின் ஸ்போர்ட்டிவ் நேக்டூ சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 2024 கேடிஎம் 250 டியூக்கில் கூடுதலாக பெற்றுள்ள கருப்பு மற்றும் ப்ளூ நிறத்தில் இரு வண்ண கலவையாக வெளியிட்டுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிறத்தில் கரு நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன் ஆரஞ்ச் வண்ணத்தை கொண்டு முன்பாக விற்பனையில் உள்ள 390 டியூக்கில் உள்ளதை போன்றே அமைந்திருக்கின்றது.
மூன்றாம் தலைமுறை கேடிஎம் 250 டியூக் மாடலில் 49சிசி என்ஜின் 9250rpm-ல் அதிகபட்சமாக 31PS பவர் மற்றும் 7250rpm-ல் 25Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் சிலிப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.
5 அங்குல LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு கனெக்ட்டிவ் சார்ந்த வசதிகளை பெற்று டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ரைட் பை வயர் திராட்டிள், க்விக் ஷிவிஃப்டர் உள்ளிட்ட அம்சங்களுடன் கிடைக்கின்றது. முன்புறத்தில் USD முன் போர்க் மற்றும் பின்புறத்தில் ப்ரீ-லோட் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் கொண்டதாகவும், 176மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது.
மூன்றாம் தலைமுறை 2024 கேடிஎம் 250 டியூக் பைக் விலை ரூ.2.39 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக உள்ளது.ஏற்கனவே இந்த மாடலில் ஆர்டிக் வெள்ளை மற்றும் எலக்ட்ரிக் ஆரஞ்ச் பெற்றுள்ளது.