மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (02) வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றது.
இதன் போது வவுணதீவு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் இவ்வுறுதிப் பத்திரங்கள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பிரதேச செயலாளர், உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.