விருதுநகர்: பறக்கும்படை அதிகாரிகளின் வாகன சோதனை… முறையான ஆவணம் இல்லை; 16 கிலோ தங்கம் பறிமுதல்!

ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பணம், நகை மற்றும் பரிசு பொருள்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகளை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ரொக்கமாக கையில் 50,000 வரை மட்டும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் பறக்கும்படை அதிகாரிகள் எல்லைகளில் உள்ள வாகனச் சாவடிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலுப் வாகனச்சோதனை செய்து வருகின்றனர்.

தங்கம்

விருதுநகர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சத்திரரெட்டிப்பட்டியில் பறக்கும் படை அதிகாரி பொண்ணு கணேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் மதுரையிலிருந்து கன்னியாகுமரிக்கு கணக்கில் வராத 6.300 கிலோ கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் அதே வழியாக வந்த மற்றொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 5.800 கிலோ கிராம் மற்றும் 4.700 கிலோகிராம் தங்கத்தை மதுரையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி கொண்டு சென்று விசாரணையில் தெரியவந்தது.

ஒப்படைப்பு

இதுகுறித்து வாகனத்தில் வந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், ‘மொத்த வியாபாரத்தின் அடிப்படையில் ஏஜென்சி மூலமாக, தங்கத்தை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எடுத்துச்செல்கிறோம் ” என கூறாயுள்ளனர். ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாததால் இரண்டு வாகனங்களில் இருந்தும் பிடிபட்ட மொத்தம் 16.800 கிலோ கிராம் தங்கத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விருதுநகர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.