வீடியோ எடிட் இனி ஈஸி கிரியேட்டர்களே! யூ டியூப் கொண்டு வந்த செயலி

யூ டியூப் அறிமுகப்படுத்திய செயலி

கிரியேட்டர்கள் யுகமாக சோஷியல் மீடியாக்கள் மாறிவிட்டன. இதன் மூலம் இப்போது லட்சக்கணக்கில் நீங்கள் சம்பாதிக்கலாம். அந்தவகையில் யூடியூப் நிறுவனம் கொண்டு வந்திருக்கும் புதிய செயலி, மொபைல் போன் பயனர்கள் தங்களது கைவசம் உள்ள வீடியோக்களை தரமான வகையில் எடிட் செய்ய உதவுகிறது. அந்த செயலியின் பெயர் யூடியூப் கிரியேட். சந்தா கட்டணம் ஏதுமின்றி இயங்கும் இந்த செயலியை யூடியூப் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

யூடியூப் கிரியேட் ஆப் விரிவாக்கம்

கிரியேட்டர்களை டார்கெட் செய்து கடந்த ஆண்டு இந்த செயலியை யூடியூப் அறிமுகம் செய்தது. இப்போது இந்தியா உட்பட 13 நாடுகளுக்கு இதன் சேவையை விரிவு செய்துள்ளது. இந்த செயலி இப்போதைக்கு பீட்டா வெர்ஷனாக இயங்கி வருகிறது. உலக அளவில் உள்ள பயனர்களின் கருத்துகளை பெற்று இது மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி பயனர்கள் எளிய முறையில் வீடியோக்களை எடிட் செய்யலாம் என யூடியூப் நம்புகிறது. தொழில்முறை வீடியோ எடிட்டிங் பணியில் உள்ள சவால்கள் இதில் பயனர்களுக்கு இருக்காது எனவும் தெரிவித்துள்ளது. 

யூடியூப் கிரியேட் ஆப் சிறப்பம்சம்

குறைந்த நேரத்தில் வீடியோக்களை பயனர்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப மொபைல் போன் வழியே இதில் எடிட் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. ஷார்ட் மற்றும் லாங் ஃபார்ம் வீடியோ என அனைத்தையும் இதில் எடிட் செய்யலாம். இந்த செயலியின் மூலம் பயனர்கள் தங்கள் வசம் உள்ள வீடியோவை எடிட் செய்யலாம். ஆடியோ ஃபைல்களை சேர்ப்பது, ஃபில்டர் மற்றும் எஃபெக்ட்களை சேர்ப்பது, ஆடியோவில் உள்ள நாய்ஸினை (சப்தம்) அகற்றுவது, அதை தங்களுக்கு வேண்டிய வடிவில் 1080P அல்லது 720P வடிவில் டவுன்லோட் செய்து கொள்ளவும் முடியும். கூடவே யூடியூபிலும் அப்டேட் செய்யவும் முடியும். 

கிரியேட்டர்கள் கவனத்திற்கு

இதுவரை வீடியோ எடிட் செய்வது எப்படி என யோசித்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் இனி யூ டியூப் கிரியேட் செயலியை பயன்படுத்த தொடங்குங்கள். உங்களின் தேவைகளை இந்த செயலி மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம். இனியும் தனியார் செயலிகளை சார்ந்திருக்க தேவையில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.