நாட்டின் முதன்மையான மாருதி சுசூகி கார் தயாரிப்பாளர் 40 ஆண்டுகளில் சுமார் மூன்று கோடி கார்களை இந்திய சந்தையில் தயாரித்துள்ளனர். இந்நிறுவனத்தால் அதிகமாக தயாரிக்கப்பட்ட கார் மாருதி 800 ஆகும்.
டிசம்பர் மாதம் 1983 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மாருதி சுசுகி நிறுவனம் 40 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து தற்பொழுது மூன்று கோடி வாகனங்கள் என்ற உற்பத்தி இலக்கை கடந்துள்ளது.
Maruti Suzuki
முதல் மாடலாக மாருதி 800 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது இது இந்திய சாலைகளில் ராஜாவாக அழைக்கப்படுகின்றது மேலும் இந்த மாடல்தான் இந்நிறுவனத்தால் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட மாடலாகும். 29 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையில் விற்பனை செய்திருந்தது.
இந்தியாவில் மூன்று ஆலைகளை இந்நிறுவனம் கொண்டிருக்கின்றது.. ஹரியானா மாநிலம் குருகிராம் மற்றும் மானசேர் பகுதிகளில் இரண்டு ஆலைகளும் அடுத்ததாக குஜராத் மாநிலத்தில் புதிய ஆலையை கொண்டு இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக இந்த கார் உற்பத்தியில் 2.68 கோடி கார்களை ஹரியானா மாநிலத்தில் உள்ள அலைகளும், 32 லட்சம் கார்களை குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை தயாரித்துள்ளது.
ஆல்டோ, பிராண்டில் அதிக உற்பத்தி செய்யப்பட்ட கார் ஆகும், அதன் தொடக்கத்தில் இருந்து 50.59 லட்சம் யூனிட்கள் தயாரிக்கப்பட்டன. நிறுவனத்தின் முதல் காரான M800, 1983 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வந்ததில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை 29.17 லட்சம் யூனிட்கள் தயாரிக்கப்பட்டு, மூன்று கோடி மைல்கல்லுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய கார்களில் ஒன்றாகும்.
- ஸ்விஃப்ட் – 31.93 லட்சம் யூனிட்கள்
- வேகன் ஆர் – 31.84 லட்சம் யூனிட்கள்
- டிசையர் – 28.61 லட்சம் யூனிட்கள்
- ஆம்னி – 20.22 லட்சம் யூனிட்கள்
- பலேனோ – 19.53 லட்சம் யூனிட்கள்
- பிரெஸ்ஸா – 11.66 லட்சம் யூனிட்கள்
- எர்டிகா – 11.04 லட்சம்
இந்தியாவின் முதன்மையான மாருதி சுசுகி நிறுவனம் தயாரிக்கின்றார்கள். உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏற்றுமதி செய்கின்றனர். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியாவிலிருந்து சுசூகி கார்களை ஏற்றுமதி செய்கின்றது. மேலும், இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் 40% பங்களிப்பை மாருதி சுசுகி நிறுவனம் தற்பொழுது கொண்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இரண்டு புதிய ஆலைகளை கட்டுமானத்தை தொடங்க திட்டமிட்டு இருக்கின்றது. ஒன்று குஜராத் மாநிலத்தில் அமைந்திருக்கின்ற ஒன்றும் மற்றொன்று காரக்கோடு ஹரியானா பகுதியிலும் தொடக்க திட்டமிட்டு இருக்கின்றது. இதன் மூலம் 2031-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 40 லட்சம் வாகனங்களை தயாரிக்க நிறுவனத்தால் திட்டமிட்டு இருப்பதாக தலைமை செயல் அதிகாரி ஹிசாசி டெக்கோச்சி குறிப்பிட்டு இருக்கின்றார்.
இந்தியாவில் தற்பொழுது இந்நிறுவனம் பிரசித்தி பெற்ற வேகன் ஆர், ஆல்டோ 800, ஸ்விஃப்ட், டிசையர் உட்பட பல்வேறு கார்களை எஸ்யூவி சந்தையில் பிரஸ்ஸா, ஃபிரான்க்ஸ், ஜிம்னி உட்பட கிராண்ட் விட்டாரா, எர்டிகா, இன்விக்டோ போன்ற எம்பிவி ரக மாடல்களையும் மொத்தமாக 18 மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்றது.
மேலும் வர்த்தக ரீதியான பிரிவில் சூப்பர் கேரி என்ற மினி டிரக்கையும் உற்பத்தி செய்து வருகின்றது.
தற்பொழுது நாடு முழுதும் நெக்ஸா, அரேனா மற்றும் கமர்சியல் என மூன்று விதமான டீலர் அமைப்பையும் இந்த நிறுவனம் கொண்டுள்ளது நாட்டின் மிகப்பெரிய டீலர் வளையமைப்பை கொண்ட நிறுவனமாகவும் விளங்குகின்றது. மாருதியின் முதல் எலக்ட்ரிக் கார் 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.