போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்; அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் பணிப்புரையின் பிரகாரம், இம்முறையும் புத்தாண்டின்; இரண்டு வாரங்கள் விசேட பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை இலங்கை போக்குவரத்து சபை தயாரித்துள்ளது என்று அதன் பிரதானி எஸ்.எம்.டி.எல்.கே.டி. அல்விஸ் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, இன்று (05) முதல் ஏப்ரல் 09 ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்வதற்காக இந்த பஸ் சேவை நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ஆயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டி வீதி, புத்தளம் வீதி, தம்புள்ளை-திருகோணமலை வீதி மற்றும் காலி வீதி போன்ற பிரதான நெடுஞ்சாலைகள் ஊடாக இந்தப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
அத்துடன், ஏப்ரல் 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதிகளில் தனியார் மற்றும் அரச நிறுவசனங்களில் பணிபரிவோர்; பலர் விடுமுறையில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதனால், கொழும்பு கோட்டையிலிருந்து வெளி மாகாணங்களுக்கு 1400 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த எதிரிபார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 13ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 1000 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாகவும், பயணிகளை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருவதற்காக ஏப்ரல் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை 1400 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.