புதுடெல்லி டெல்லி அமைச்சர் அதிஷி தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி கல்வி அமைச்சருமான அதிஷி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் தம்மை பா.ஜ.க.வில் சேருங்கள் அல்லது ஒரு மாதத்துக்குள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவீர்கள் என்று தனக்கு மிரட்டல் வந்ததாகப் பரபரப்பு குற்றம் சாட்டினார். தான் உள்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் விரைவில் கைது செய்யப்பட இருப்பதாகவும் அதிஷி தெரிவித்தார். […]