பைக் விற்பனையில் பட்டையை கிளப்பிய டாப் 6 நிறுவனங்கள் – மார்ச் மாத நிலவரம் இதோ!

Two Wheeler Sales Details In March 2024: இந்திய இரு சக்கர வாகன சந்தை என்பது மாதாமாதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேபோன்று கடந்த மார்ச் மாதமும் இரு சக்கர வாகனத்தின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி இரண்டும் அதிகமாகி உள்ளது. குறிப்பாக, ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்ட, டிவிஎஸ் மோட்டர், பஜாஜ் ஆட்டோ, சுசுகி, ராயல் என்பீல்ட் ஆகிய நிறுவனங்கள் தற்போது முன்னணியில் உள்ளன. 

கடந்தாண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற விற்பனையை விட, இந்தாண்டு விற்பனை 14.4% உயர்ந்துள்ளது. அதாவது கடந்தாண்டு மார்ச் மாதத்தில் 12 லட்சத்து 26 ஆயிரத்து 262 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு மார்ச் மாதத்தில் 14 லட்சத்து 13 ஆயிரத்து 152 யூனிட்கள். கடந்த பிப்ரவரி மாதம் 14 லட்சத்து 48 ஆயிரத்து 479 யூனிட்கள் விற்பனையாது. இதன்மூலம், கடந்த பிப்ரவரி மாதத்தை விட 2.44% விற்பனை இந்த மார்ச் மாதத்தில் நடைபெற்றுள்ளது.

முதலிடம் பிடித்த ஹீரோ நிறுவனம்

இந்தாண்டும் ஹீரோ நிறுவனமே விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இருப்பினும் கடந்தாண்டை விட அதன் விற்பனை இந்தாண்டு குறைந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 730 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு மார்ச் மாதத்தில் 4 லட்சத்து 59 ஆயிரத்து 257 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. 43,473 யூனிட்கள் விற்பனை இந்தாண்டு குறைந்துள்ளது.

ஆனால், 2024 பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் விற்பனை அதிகரித்துள்ளது. 3.14% விற்பனை இந்த மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளது, கடந்த பிப்ரவரி மாதத்தில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 257 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. ஹீரோவில் Splendor, Glamour, Passion ஆகிய மாடல்கள் முன்னிலை வகிக்கின்ரன. தற்போது புதிதாக அறிமுகமாகி உள்ள Xtreme 125R Premium மாடலும் நல்ல விற்பனையில் உள்ளது.  

டாப் நிறுவனங்களின் விற்பனை விவரம்

ஹோண்டா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஹோண்டாவின் வருடாந்திர வளர்ச்சி என்பது 81.33% ஆக உயர்ந்துள்ளது. ஹோண்டா கடந்தாண்டு வெறும் 1 லட்சத்து 97 ஆயிரத்து 512 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்த நிலையில், இந்தாண்டு மார்ச் மாதத்தில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 151 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பிப்ரவரி மாதத்தில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 967 யூனிட்கள் விற்பனையாகியிருந்தது. இதன்மூலம், ஹோண்டாவின் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தை விட 13.48% சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

டிவிஎஸ் நிறுவனம் இந்த விற்பனையில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக வருடாந்திர வளர்ச்சி 8.20% உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 532 யூனிட்கள் விற்பனையாகி உள்ளனர். ஆனால், கடந்த மார்ச் மாதத்தை விட 2.61% விற்பனை சரிந்துள்ளது. இந்த மார்ச் மாதத்தில் பஜாஜ் நிறுவனம் 1 லட்சத்து 83 ஆயிரம் யூனிட்களையும், சுசுகி நிறுவனம் 86 ஆயிரத்து 164 யூனிட்களையும், ராயல் என்பீல்ட் நிறுவனம் 66 ஆயிரத்து 44 யூனிட்களையும் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.