லோக்கல் டிரையினில் பயணிக்கும் ரித்திகா சிங்
நடிகைகள் என்றாலே அவர்கள் வேறு ஒரு உலகத்தில் பயணிப்பவர்கள் என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கும். ஆனால், ஒரு சிலர் மட்டும்தான் இயல்பான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கள். தங்களது பிரபலத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மக்களோடு மக்காளகவும் பயணிப்பார்கள்.
அப்படி ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் 'வேட்டையன்' நடிகை ரித்திகா சிங். மும்பையில் நெருக்கடியான லோக்கல் டிரையினில் பயணித்துள்ளது குறித்து பதிவிட்டுள்ளார்.
“எனது ஹேன்ட்பேக்கில் நிறைய கீ செயின்கள் இருப்பதை அந்த பையன்கள் பார்த்து இன்னும் கூடுதலாக சேர்த்துவிட்டார்கள். அவர்களுக்கு என்னை ஞாபகமில்லை, காரணம் நான் எப்போதுமே மாஸ்க் அணிவேன். ஆனால், அவர்களை நான் கடந்த வாரம் கூடப் பார்த்தேன். அவர்களைத் தவிர்க்க நினைத்தேன், ஆனால், நேற்று அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயில் வந்த புதிதில் நடிகர் ஆர்யா கூட அதில் அடிக்கடி பயணம் செய்து வந்தார். இப்போதெல்லாம் பயணிப்பதில்லை போலிருக்கிறது. பொதுப் போக்குவரத்தை சினிமா பிரபலங்கள் பயன்படுத்துவது மிகவும் அபூர்வமானதுதானே.