‛விடாமுயற்சி' அஜித் எடுத்த ரிஸ்க் : மேக்கிங் வீடியோ வெளியீடு

மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' படத்தில் அஜித் நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடக்கிறது. தற்போது படத்திற்கு பிரேக் விட்டுள்ளனர். இதனால் அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

விடாமுயற்சி படம் பற்றி நிறைய நெகட்டிவ்வான செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக படம் டிராப், படம் இப்போதைக்கு வராது என்கிற மாதிரியான செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். இந்தக்காட்சி நவம்பரில் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் அஜித் காரை ஓட்டி செல்ல, அவரது அருகில் ஆரவ் காயங்களுடன் கட்டப்பட்டு உள்ளார். கார் சற்று நிலை தடுமாற ஒரு இடத்தில் கவிழ்ந்து விடுகிறது. இந்தக்காட்சியில் டூப் எதுவும் போடாமல் அஜித் மற்றும் ஆரவ் நடித்துள்ளனர். ஏற்கனவே பைக் மற்றும் கார் தொடர்பான காட்சிகளில் டூப் எதுவும் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் அஜித். இப்போது அதேப்போன்று பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதோடு எதற்காக இப்படி ரிஸ்க் எடுக்கிறீர்கள் அஜித் என அவர் மீது அக்கறை கொண்ட ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர். அதேசமயம் சில நெகட்டிவ்வான கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர்.

மயிரிழையில் தப்பினோம் – ஆரவ்
இதே வீடியோவை பகிர்ந்து நடிகர் ஆரவ் வெளியிட்ட பதிவில், ‛‛இறுதியாக இப்போது வெளியாகி விட்டது. நாங்கள் இருவரும் மயிரிழையில் தப்பினோம். கடவுளுக்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார் நடிகர் ஆரவ்

வீடியோ லிங்க்….. : https://twitter.com/SureshChandraa/status/1775790879388963239

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.