இலங்கை – அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (05) ஆரம்பமாகவுள்ளது.
இதன் முதல் போட்டி இன்று (05)இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி 7ஆம் திகதியும், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி 9ஆம் திகதியும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மூன்று அணிகளுக்கும் இடையிலான வு20 போட்டி அண்மையில் ஹம்பாந்தோட்டை சூரியவௌ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. காலியில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு ஐ அலைவரிசை மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் யூடியூப் செனல் ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும்.