மார்ச் மாதத்திற்கான ICC துடுப்பாட்ட வீரர் விருதுக்கு இலங்கை அணியின் துடுப்பாட்ட் வீரர் கமிந்து மெண்டிஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட் தொடரில் கமிதுவின் அபார துடுப்பாட்டமே அதற்கு காரணம். கமிந்து மெண்டிஸைத் தவிர, அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் அடேர் மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி ஆகியோர் மார்ச் மாதத்திற்கான துடுப்பாட்ட வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
முடிவடைந்த பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸ்களில் 367 ஓட்டங்களை பெற்றதன் மூலம் கமிந்து மெண்டிஸ் போட்டியின் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் ஆனார்.