அஜித் படத்தில் கமிட்டான ‛ஜெயிலர்' நடிகர்
நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவதற்குள் அடுத்தப்படத்தின் அறிவிப்பு வெளியானது. ‛மார்க் ஆண்டனி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‛குட் பேட் அக்லி' என்ற திரைப்படத்தில் அஜித் நடிப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
‛குட் பேட் அக்லி' படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், இப்படம் ஒரு காமெடி படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. மற்றொருபுறம் 3 வித கதாபாத்திரங்களுக்கு இடையேயான பயங்கரமான ஆக்சன் படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகர் சுனில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. தெலுங்கில் பிரபலமான நடிகரான சுனில், புஷ்பா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். மாவீரன், ஜெயிலர், ஜப்பான், மார்க் ஆண்டனி என தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.