சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிடுவதால் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளதாகவும், வாக்கு கேட்டு செல்லுமிடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் வரும் செய்திகளை மறுத்த கார்த்தி சிதம்பரம் ‘அதெல்லாம் ஒரு செட்டப்தான்’ என்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அருகேயுள்ள வாணியங்குடியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வந்த காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பாஜகவின் இந்து, இந்துத்துவா அரசியலை தமிழகத்தில் கண்டிப்பாக நிராகரிப்பார்கள். தமிழகம் வரும் நட்டா, சைவமா, அசைவமா எனத் தெரியாது, அசைவமாக இருந்தால் எந்த ஊரில் எந்த ஹோட்டலில் சாப்பிடலாம் என்று அவரிடம் பரிந்துரை செய்வேன்.
நீட் தேர்வு நடத்த அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது வியப்பளிக்கிறது. இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும்போது அனைத்து மாநில அரசுகளின் ஒப்புதலுடன் ஒரே ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவோம்.
கச்சா எண்ணெய் விலை குறையும்போது, பெட்ரோல் விலையும் குறையும். ஒரே ஜிஎஸ்டி அமல்படுத்தும் போது பெட்ரோல் விலை மேலும் குறையும். இப்போது இருப்பது ஜிஎஸ்டி அல்ல, ஜிஎஸ்டி என்ற பெயரில் போடப்படும் வரி மட்டுமே.
எனக்கு கட்சியிலும், மக்களிடமும் எதிர்ப்பு இல்லை, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்த சிலர் அவதூறு பரப்புகின்றனர். இது எல்லாம் ஒரு செட்டப்தான். மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 26 ஆண்டுகளாக தேர்தல் பணிகளை செய்து வருகிறேன், மக்களிடம், அரசியல் மீதும், அரசியல் பரப்புரை மீதும், விருப்பம் குறைந்து விட்டது உண்மைதான்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY