ஜெய்ப்பூர் பிரதமர் மோடி நாட்டின் ஜனநாயகத்தை சிதைப்பதாக சோனியா காந்தி கூறி உள்ளார். நேற்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய சோனியா காந்தி, ”கட்ந்த் 10 ஆண்டுகளாக வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை போன்றவற்றுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒரு அரசிடம் நாடு […]