ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெறும் ஐபிஎல் 2024 போட்டியில் மதிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் இன்று தனது நான்காவது போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகிறது. இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை வீரர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக அணி நிர்வாகம் வீரர்களை ஜாம்நகருக்கு அழைத்து சென்று இருந்தது.
மும்பை அணிக்கு முதல் மூன்று போட்டிகளில் முக்கிய வீரர் சூரியகுமார் யாதவ் விளையாடவில்லை. காயம் காரணமாக பெங்களூருவில் உள்ள அகாடமியில் மறுவாழ்வில் இருந்து வந்தார். தற்போது முழு உடற்தகுதியுடன் அணிக்கு திரும்பியுள்ளார். ர்யகுமார் யாதவ் ஐபிஎல் 2023ல் 16 போட்டிகளில் 605 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். பிசிசிஐ சூர்யகுமார் யாதவ் முழு உடற்தகுதி அடைந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் இன்று நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமன் திர்க்கு பதிலாக அவர் அணியில் இடம் பெற கூடும். நமன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் டக் அவுட் ஆனார்.
Back home pic.twitter.com/fIztXOxiyD
— Surya Kumar Yadav (@surya_14kumar) April 6, 2024
மேலும் 17 வயதான தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் க்வேனா மபாகாவும் அணியில் தனது இடத்தை இழக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவருக்கு பதிலாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாராவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் நல்ல தொடக்கத்தை கொடுக்க தவறினர். இதனால் இன்றைய போட்டியில் கம்பேக் கொடுக்க நிச்சயம் முயற்சி செய்வார்கள். மிடில் ஆர்டரில் திலக் வர்மா கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார், மேலும் வான்கடே மைதானத்தில் பேட்டிங்கிற்கு ஏற்ற சூழ்நிலையில், அவர் இன்று ஒரு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணிக்கு பந்துவீச்சு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்து வீசினாலும் விக்கெட் எடுக்கவில்லை. டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸுக்கு பும்ரா பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸியிடம் இருந்தும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இன்றைய டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான போட்டியில், டிம் டேவிட்டிற்குப் பதிலாக முன்னாள் ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி அல்லது வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் அணியில் இடம் பெறலாம்.
டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸின் உத்ததேச பிளெயிங் 11: ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (WK), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா, ஆகாஷ் மத்வால்
இம்பாக்ட் வீரர்கள்: டிம் டேவிட், டெவால்ட் ப்ரீவிஸ், முகமது நபி, ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா