ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் பிரேம் நகரைச் சேர்ந்தவர் ஃபதே முகமது (42 வயது). இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருந்தார். 11-ம் வகுப்பு படித்து வந்த அவரது மகள் பள்ளித் தேர்வுக்கு படிக்காமல் இருந்துள்ளார். இதனால் கோபத்தில் இருந்த அவர் வியாழக்கிழமை குச்சியால் சிறுமியை பலமாக அடித்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் மாமா அளித்த புகாரின் அடிப்படையில், ஃபதே முகமதை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். சிறுமி உள் காயங்களால் இறந்திருக்கலாம் என்றும் மரணத்திற்கான சரியான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :